
வியர்வையும், வெப்பமும் அதிகரிக்கும் போது முகத்தின் இயற்கையான ஈரப்பதம் மற்றும் பளபளப்பு குறைய தொடங்குகிறது. முகத்தில் ஏற்படும் கருமையான திட்டுகள் அல்லது முகப்பருக்கள் உங்கள் சருமத்தை கடுமையாக பாதிக்கும்.
மேலும் படிக்க: முடி உதிர்வுக்கு சிம்பிள் தீர்வு; வீட்டிலேயே இருக்கும் இந்த 5 எண்ணெய்களை கூந்தலுக்கு பயன்படுத்துங்கள்
இதற்கு பலரும் அதிக விலை கொடுத்து புதிய க்ரீம்கள் மற்றும் லோஷன்களை வாங்குவார்கள். ஆனால், அவற்றில் இரசாயன பொருட்கள் நிறைந்திருப்பதால் சில நேரங்களில் சருமம் பொலிவிழந்து காணப்படும். மேலும், ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
உங்கள் முகத்தின் பொலிவை அதிகரிக்க விலை உயர்ந்த பொருட்களை தேட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே உள்ள எளிமையான பொருட்களை பயன்படுத்தி முகத்தின் பொலிவை அதிகரித்து, கருமையான திட்டுகளை திறம்பட குறைக்க முடியும். இதற்காக சில பொருட்களை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.
மசாஜ் செய்யும் போது சருமத்தின் பளபளப்பு மற்றும் புத்துணர்ச்சி மேம்படுகிறது. அதனால் தான், அழகு நிலையங்களில் ஃபேஷியல் போன்றவற்றில் மசாஜ் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. அந்த வகையில் வீட்டில் இருக்கும் இரண்டு எளிமையான பொருட்களை பயன்படுத்தி உங்கள் முகத்திற்கு மசாஜ் செய்யலாம்.
மேலும் படிக்க: ஆளி விதை தரும் அதிசய பலன்கள் தெரியுமா? அடர்த்தியான கூந்தலுக்கு இதுதான் ரகசியம்!
மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற, வாரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெயை வைத்து முகத்தில் மசாஜ் செய்யலாம். இது உங்கள் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவும். ஒரே இரவில் உங்கள் முகம் பொலிவுடன் இருப்பதை நீங்கள் காணலாம். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, அதை முகத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பிறகு, முகத்தை காட்டன் கொண்டு துடைக்கவும். இந்த நடைமுறை உங்கள் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.

கற்றாழை ஜெல் முகத்திற்கு மிகவும் சிறந்தது. கற்றாழை ஜெல்லை முகம் முழுவதும் தடவி சுமார் 30 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். இதனை 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து விட்டு, அதன் பிறகு தண்ணீரால் கழுவவும். இது அரிப்பு மற்றும் கருமையான திட்டுகளை குறைத்து, உங்கள் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

உங்கள் முகத்தில் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், மசாஜ் செய்வதை தவிர்க்கவும். மேலும், ஒரு பொருளை முகத்தில் தடவும் முன், ஒவ்வாமை உள்ளதா என சோதித்து பார்க்கவும். குறிப்பாக, மருத்துவரை அணுகி ஆலோசனை நடத்தலாம். மசாஜ் செய்த பிறகு சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது நல்லது.
இந்த எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் சரும ஆரோக்கியத்தை வீட்டில் இருந்தபடியே பராமரிக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com