பெண்களின் உலகமே அவர்களது குடும்பம் தான். வீட்டில் உள்ளவர்களுக்காக எல்லா விஷயங்களையும் ரசித்து ரசித்து செய்யும் சுயநலம் அற்ற மனமே, இனி ஒரு முக்கியமான நபரை பற்றியும் சிந்தியுங்கள். உங்கள் குடும்பத்தை தாண்டி யார் அந்த முக்கியமான நபர் என்று யோசிக்கிறீர்களா?
மஹாராணியாக பிறந்து வளர்ந்த ஒரு இளவரசி உங்களுக்குள் இருக்கிறாள். காசு என்னங்க காசு, தாய் தந்தையிடம் இருக்கும் வரையில் எல்லா பெண் குழந்தைகளும் இளவரசிகள் தான். கவலை இன்றி வாழ்ந்த அந்த குட்டி இளவரசியாக மாற வேண்டிய தருணம் இது. வருகிற தமிழ் புத்தாண்டு முதல் நீங்கள் தொலைத்த அந்த அழகிய சின்ன சின்ன சந்தோஷங்களை மீட்டு கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்த தீர்மானங்களை கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கை நிச்சயம் ரசனை மிகுந்ததாக மாறும் என உத்திரவாதம் அளிக்கிறேன்.
இந்த பதிவும் உதவலாம்: தையல் மிஷினை சுத்தம் செய்வதற்கான 7 வழிகள்
உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்
வேலைகள் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது உங்களுக்கான நேரத்தை ஒதுக்குவது. உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை நீங்கள் சமீப நாட்களாக மறந்து இருக்கலாம். பாடல் கேட்பது, ஓவியம், நடனம் என சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது நீங்கள் விரும்பி ரசித்து செய்த விஷயத்தை செய்வதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். மனதுக்கு நெருக்கமான விஷயத்தை செய்வது உங்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை கொடுக்கும்.
உங்களுக்கு பிடித்த உணவையும் சமைத்து சாப்பிடுங்கள்
குழந்தைக்கு என்ன பிடிக்கும், கணவருக்கு என்ன பிடிக்கும் என்று ரசித்து ரசித்து சமைப்பது தவறல்ல. ஆனால் இப்படி எத்தனை நாட்கள் உங்களுக்கு பிடித்த உணவை சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள்? அம்மா கையால் சாப்பிட்ட ஒரு சில உணவுகள் மாமியார் வீட்டு பழகத்திலேயே இருக்காது. அப்படி நீங்க ஆசையோடு விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து சாப்பிடுங்கள். அதே சமயம் எவ்வளவு வேலை சுமை இருந்தாலும் நாளுக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்களை காதலிக்க மறக்காதீர்கள்
உங்களை ரசிக்க மறக்காதீர்கள். சிறு பிள்ளையாக இருந்த போது சின்னதாக முகப்பரு வந்தாலே கண்ணாடி முன்னாடி மணி கணக்கில் நின்றிருப்போம். ஆனால் இப்போது எண்ணெய் வலியும் முகத்தை கண்ணாடியில் பார்க்க கூட நேரமின்றி உழைத்து கொண்டு இருக்கிறோம். நைட்டியும், கொண்டையும் தாண்டி உங்களுக்கு பிடித்த புடவை அல்லது உடையை அணிய முயற்சி செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு அழகு என்று கண்ணாடி முன்னாடி நின்று ரசியுங்கள். உங்கள் அடர்ந்த கண்களில் வெளிப்படும் உண்மையான மகிழ்ச்சியில் நிறைந்திடுங்கள்.
என்ன ஆனாலும், யார் என்ன சொன்னாலும் உங்கள் மீது வைத்திருக்கும் காதலை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். மற்றவர்களை கவர்வது அல்ல நம் நோக்கம். உங்களை ரசிக்கவும், பாராட்டுவதற்கும், காதலிப்பதற்கும் உங்களை விட சிறந்த நபர் இவ்வுலகில் இருக்க முடியாது.
இந்த பதிவும் உதவலாம்: மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய். ஏமாற்றுகிறதா திமுக அரசு?
உங்கள் தோழர்களுடன் பேசுங்கள்
பள்ளி, கல்லூரி என உங்களுடன் படித்த தோழியை கடைசியாக எப்போ சந்தித்தீர்கள் என்று நினைவில் இருக்கிறதா? உங்களுடைய நெருங்கிய தோழியுடன் ஃபோனில் அல்லது நேரில் சந்தித்து பேசுங்கள். வீட்டு சூழல், கஷ்டங்களை பற்றி அதிகம் பேசாமல் அழகிய ஞாபகங்களை நினைவுபடுத்துங்கள். திருமணம் ஆனாலும் உங்கள் நெருகிய தோழிகளுடன் இணைப்பில் இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களுடன் பேசுகையில் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள். எல்லா கால கட்டத்திலும் ஒரு நல்ல நட்பு அவசியம்.
நல்ல மகளாக, அன்பான அம்மாவாக, பாசமான தங்கையாக/அக்காவாக, பொறுப்பு மிக்க மனைவியாக வாழ்வது மட்டுமல்ல வாழ்க்கை. நீங்கள் வாழ்ந்த நாட்களை திரும்பி பார்க்கும் பொழுது அதில் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்களுக்காக வாழ்வது சுயநலம் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். குடும்ப பொறுப்புகளை சிறப்பாக கையாளும் நீங்கள் இனி உங்களுக்காகவும் வாழ வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையை ரசித்து வாழுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்களால் இதை விட பல மடங்கு சிறப்பாக செயலாற்ற முடியும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்கு தெரிந்த சிறந்த பெண்களுடன் இதை பகிர மறக்காதீர்கள். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation