herzindagi
image

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகள்

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகளின் பட்டியலை இந்தக் கட்டுரையில் காணலாம். இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
Editorial
Updated:- 2025-11-21, 19:08 IST

வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, கவனம் மற்றும் நினைவாற்றலுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம் என்பதை நாம் அறிவோம். மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருந்தாலும், பல சைவ உணவுகளிலும் இயற்கையாகவே ஒமேகா-3 நிறைந்துள்ளது. 

இவற்றை உங்கள் குழந்தைகளின் அன்றாட உணவில் எளிதாக சேர்த்து, அவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கலாம். உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டிய ஒமேகா-3 உணவுகளை இதில் காணலாம்.

 

வால்நட் (Walnuts):

 

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் உணவுகளில் வால்நட் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இவை, நினைவாற்றல் மற்றும் கற்றலை அதிகரிக்கும் ஒரு வகை ஒமேகா-3-யான ஏ.எல்.ஏ (ALA - Alpha-Linolenic Acid)-ஆல் நிரம்பியுள்ளன. இவற்றை உங்கள் குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Walnut

 

மேலும் படிக்க: Apricot benefits: தினமும் உலர்ந்த பாதாமி பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

 

ஆளி விதைகள் (Flaxseeds):

 

ஆளி விதைகள், ஒமேகா-3-யின் மிகச் சிறந்த சைவ உணவுகளில் ஒன்றாகும். இவற்றை பொடியாக்கி, சப்பாத்தி மாவு, ஸ்மூத்திகள் அல்லது குழந்தைகளுக்கு செய்யும் லட்டு ஆகியவற்றில் சேர்த்துக் கொடுக்கலாம்.

 

சியா விதைகள் (Chia Seeds):

 

நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 நிறைந்த சியா விதைகளை, இரவு முழுவதும் ஊறவைத்து, புட்டிங்ஸ், மில்க் ஷேக்குகள் அல்லது தயிரில் கலந்து காலை உணவாக கொடுக்கலாம். இது ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாகும்.

மேலும் படிக்க: Chia seeds: சரும ஆரோக்கியத்திற்கு சியா விதைகள்: இப்படி பயன்படுத்தினால் கூடுதல் நன்மைகளை பெறலாம்

 

சோயாபீன்ஸ் மற்றும் சோயா பொருட்கள்:

 

டோஃபு அல்லது சோயா பால் போன்ற சோயா பொருட்கள், புரதத்துடன் ஒமேகா-3-யையும் வழங்குகின்றன. இது குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

 

பூசணி விதைகள் (Pumpkin Seeds):

 

இதில் ஒமேகா-3, சின்க் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன. மொறுமொறுப்பான இந்த சிற்றுண்டி, குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக இயங்க வைக்கிறது.

Pumpkin seeds

 

கீரை வகைகள்:

 

பசலைக் கீரை அல்லது வெந்தயக் கீரை போன்ற கீரைகளில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் சிறிய அளவில் ஒமேகா-3 ஆகியவை உள்ளன. இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.

 

இந்த உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் குழந்தையின் அறிவாற்றலையும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com