Chia seeds: நம்முடைய சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சியா விதைகள் இயற்கையான தீர்வு தருகின்றன. அந்த அளவிற்கு இதில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. அதனடிப்படையில், சியா விதைகளின் நன்மைகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Benefits of aloe vera gel: கற்றாழை பயன்படுத்துவதால் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை, சருமத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகின்றன. முகப்பரு தழும்புகளை மறையச் செய்வதற்கும் இது பயன்படுகிறது. சியா விதைகளில் வைட்டமின் ஈ, சின்க் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இவை சருமத்திற்கு ஊட்டமளிக்கின்றன. இதன் மூலம் கரும்புள்ளிகள் படிப்படியாக மறையத் தொடங்குகின்றன. சியா விதைகள் வெறும் கரும்புள்ளிகளை மட்டுமே மறையச் செய்வதில்லை; அவை நம் சருமத்தை உள்ளிருந்தே குணப்படுத்த உதவுகின்றன.
சியா விதை ஃபேஸ்பேக்: இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை அரை கப் தண்ணீரில் சுமார் 20 நிமிடம் ஊறவைத்து, ஜெல் ஆகும் வரை காத்திருக்கவும். இந்த ஜெல்லுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலக்க வேண்டும். இதை முகத்தில், குறிப்பாக கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் பூசவும். இதன் பின்னர், சுமார் 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இந்த வழிமுறை சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
இந்த ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்த முடியாதவர்கள், சியா விதை எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனை கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன்பாக இதனை எடுத்து சில துளிகள் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் மசாஜ் செய்யலாம். பார்ப்பதற்கு மிக சாதாரணமாக தெரிந்தாலும் இந்த வழிமுறையும் நல்ல பலன் கொடுக்கும். இந்த எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்கள் அடர்த்தியாக உள்ளன.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை இயற்கையான வழியில் அதிகரிக்க உதவும் 5 ஹேர்மாஸ்க்
இந்த செயல்முறையில், ஊறவைத்த சியா விதைகளை வெள்ளரிக்காய் சாறுடன் கலந்து, ஒரு ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைக்கவும். தினமும் காலை நேரத்தில், ஒரு ஐஸ் கட்டியை முகத்தில் மெதுவாக தடவலாம். இதன் மூலம் சருமத்தின் துளைகளை இறுக்கமாக வைத்திருக்க முடியும். மேலும், சியா விதைகள் மற்றும் வெள்ளரிக்காயில் இருக்கும் குளிர்ச்சியான தன்மை புத்துணர்ச்சி அளிக்கிறது.
சியா விதைகளின் சிறப்பு என்னவென்றால், அவற்றை பல வழிகளில் நாம் பயன்படுத்தலாம். உணவாக எடுத்துக் கொள்வது முதல் சரும பராமரிப்புக்கு வெளிப்புறமாக பயன்படுத்துவது வரை பல வழிகளில் இதனை நாம் உபயோகிக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com