Apricot benefits: நமது அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் சிறிய, ஆரோக்கியமான விஷயங்களை சேர்ப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உலர்ந்த ஆப்ரிகாட் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை இதில் பார்க்கலாம். இதனை தமிழில் பாதாமி பழம் என்று கூறுவார்கள்.
மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்
காலை நேரத்தில் செரிமான செயல்முறையை தொடங்க உலர்ந்த ஆப்ரிகாட் பழங்கள் ஒரு சிறந்த வழியாகும். இவற்றில் உள்ள இயற்கையான நார்ச்சத்து குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனால் செரிமான செயல்முறை சீராகவும், சிறப்பாகவும் நடைபெற முடியும். இது புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு மென்மையான தொடக்கமாக இருக்கலாம்.
வைட்டமின் ஏ மற்றும் அன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்த உலர்ந்த ஆப்ரிகாட்கள், உங்கள் சருமத்தை சீராக பராமரிக்க உதவுகின்றன. அவை சருமம் வறட்சி அடைவதை தடுத்து, இயற்கையான பொலிவை கொடுக்கின்றன. மேலும், காலை நேரத்தில் இதனை சாப்பிடுவது கூடுதல் நன்மைகளை அளிக்கும்.
நீங்கள் அதிக கலோரி கொண்ட காலை உணவுகளை தவிர்க்க முயற்சித்தால், இரண்டு உலர்ந்த ஆப்ரிகாட்கள் ஒரு சிறந்த தேர்வாகும். அவற்றின் நார்ச்சத்து காரணமாக இவை இலகுவான அதே சமயம் வயிறை நிரப்பும் உணர்வை தருகின்றன. இதனால் பசியை கட்டுப்படுத்த முடியும். மேலும், சோர்வான உணர்வும் ஏற்படாது.
உலர்ந்த ஆப்ரிகாட்களில் உள்ள பொட்டாசியம், இருதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த தாது, உடலில் சோடியம் அளவை சமன் செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதை உங்கள் அன்றாட உணவு பழக்கத்தில் சேர்ப்பதன் மூலம் இருதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்.
மேலும் படிக்க: Chia seeds: சரும ஆரோக்கியத்திற்கு சியா விதைகள்: இப்படி பயன்படுத்தினால் கூடுதல் நன்மைகளை பெறலாம்
உலர்ந்த ஆப்ரிகாட்களின் பிரகாசமான ஆரஞ்சு நிறத்திற்குக் காரணம் பீட்டா-கரோட்டின் (Beta-Carotene) ஆகும். இது வைட்டமின் ஏ-வின் முக்கிய சத்தாக கருதப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து கண் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. கண் வறட்சி, அழுத்தம் மற்றும் பார்வை தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இது உதவுகிறது.
காலை அல்லது மற்ற நேரங்களில் சோர்வாக உணரும் போது இதனை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள இயற்கை சர்க்கரைகள், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களுடன் இணைந்து, விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை அளிக்கின்றன.
உலர்ந்த ஆப்ரிகாட்களில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உங்கள் எலும்புகளை வலுப்படுத்த இணைந்து செயல்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் உங்களுக்கு வயதாகும் போது எலும்பு அடர்த்தியை பராமரிப்பதற்கும், எலும்பு முறிவு அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்கும் மிகவும் முக்கியமானவை ஆகும்.
உலர்ந்த ஆப்ரிகாட்களில் இரும்புச்சது அதிகமாக காணப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இதனை வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களுடன் சேர்த்து சாப்பிடும் போது கூடுதல் நன்மை கிடைக்கும்.
இதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியத்தை சீராக மேம்படுத்துவதற்கு உலர்ந்த ஆப்ரிகாட்கள் பயன்படுகிறது என அறிந்து கொள்ளலாம். இதனை உங்கள் தினசரி உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த நன்மைகளை பெற முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com