இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், நமது உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கவழக்கங்களில் சமரசம் செய்யும் போது, அது நமது இருதய ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.
மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்
இவை மட்டுமின்றி இரத்த அழுத்த பிரச்சனைகள், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஆனால், உணவு வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த அபாயங்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் உணவுகளை இதில் பார்க்கலாம்.
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. ஓட்ஸை தொடர்ந்து சாப்பிடுவது, கொழுப்பின் அளவை 5-7% வரை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. ஓட்ஸில் உள்ள 'பீட்டா-குளுகான்ஸ்' (Beta-glucans), கொழுப்பு படிமங்களை நீக்க உதவுகிறது. மேலும், இது செரிமான அமைப்பையும் மேம்படுத்துவதால், இரத்த சர்க்கரை அளவையும், இருதய ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
முருங்கைக்காய், முருங்கை கீரையில் அன்டிஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் பல்வேறு சேர்மங்கள் நிரம்பியுள்ளன. இதில் உள்ள சத்தான கூறுகள் இருதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. முருங்கையில் 'குவெர்செடின்' (Quercetin) என்ற அன்டிஆக்சிடென்ட் காணப்படுகிறது. இது உடலில் ஏற்படும் அழற்சி அபாயத்தை குறைக்கிறது, இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கிறது. முருங்கையை தினமும் எடுத்துக்கொள்வது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை (Oxidative Stress) தடுத்து, தமனிகளை சுத்தப்படுத்த உதவுகிறது.
மேலும் படிக்க: சிறுநீர்ப்பாதை தொற்றை குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்திய முறைகள்; இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்
வால்நட்களில் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (Alpha-linolenic acid) நிறைந்துள்ளது. இது ஒரு ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகும். இது தமனிகளை சுத்தப்படுத்துவதிலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL) அளவை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமிலம் அழற்சியை எதிர்த்து போராடுவதுடன், இரத்த அழுத்த பிரச்சனைகளையும் சமாளிக்க உதவுகிறது. குறிப்பாக, உயர் இரத்த அழுத்தம் (Hypertension) உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.
வெந்தயத்தில், கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும் சத்து சேர்மங்கள் உள்ளன. வெந்தயத்தை தவறாமல் உட்கொள்ளும் நபர்களுக்கு லிப்பிட் புரொஃபைல் (Lipid Profile - இரத்த கொழுப்பின் அளவு) சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது.
பொதுவாக நமது உணவுகளுக்கு மணமூட்டவும், அலங்கரிக்கவும் பயன்படும் கறிவேப்பிலை சுவைக்கு மட்டுமானது அல்ல. இது இருதய ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரு ஆற்றல் மையம் போன்றது எனலாம். கறிவேப்பிலையில் உள்ள அன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்து, கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதை குறைக்கிறது, அழற்சியை தடுக்கிறது மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க உதவும். இதனால், நீண்ட நாள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com