சிவனை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வழிபடக்கூடிய மகா சிவராத்திரி வழிபாடு பண்டிகை நாளை உலகம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மகா சிவராத்திரி பால்குண மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் 14 வது நாளில் வருகிறது.
இந்த சிவராத்திரி விழாவை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். தமிழகத்தை பொறுத்தமட்டில் ஒவ்வொரு சிவன் கோவில்களிலும் சிவராத்திரி வழிபாடு மாறுபடும். குறிப்பாக, திருவண்ணாமலையில் சிவராத்திரி வழிபாடு இரவு முழுவதும் அதிகாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். அதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நான்கு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு சித்திரை மாசி வீதிகளில் சுவாமியும் அம்பாளும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மகா சிவராத்திரி வழிபாடு
மகா சிவராத்திரி நன்னாளில் சிவபெருமானை வழிபட்டால் நமக்கு கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என்பது இந்து மக்களின் ஐதீகம். ஆகம விதிகளை கடைபிடித்து நவராத்திரி விழாவிற்கு சிவனுக்கு விரதம் இருந்து அபிஷேக ஆராதனைகள் செய்து மனம் உருகி சிவனை வழிபடும்போது நமது முன் ஜென்ம பாவங்கள் விலகிப் போகும் என்பது நமது சிவபுராணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 8 இரவு 8.20 மணிக்கு துவங்கி மறுநாள் காலை மார்ச் 9ஆம் தேதி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த ஆண்டு மகா சிவராத்திரி பூஜையை நாளை இரவு 8.30 மணிக்கு மேல் துவங்க வேண்டும். இந்த நன்னாளில் புராணங்களின்படி சிவபெருமான் பார்வதி தேவியுடன் ஐக்கியமாகி தாண்டவம் ஆடும் நிகழ்வும் நடைபெற உள்ளது. மகா சிவராத்திரி விரதத்தில் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி என்று அம்மாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படும்.
சிவராத்திரி விரதம் இருந்து பூஜை செய்ய நினைப்பவர்கள் நாளை இரவு 8 மணிக்கு ஒரு பூஜை, 12 மணிக்கு பின் ஒரு பூஜை, பிரம்ம முகூர்த்தத்தில் ஒரு பூஜை செய்ய வேண்டும். அதன் பின் குலதெய்வ வழிபாடு என 4 யாமத்தில் வழிபட வேண்டும்.
மகா சிவராத்திரிக்கு தேவையான அடிப்படி பூஜை பொருட்கள்
- பால், சந்தனம், விபூதி, பன்னீர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், வெட்டி வேர், வில்வ இலை அபிஷேகத்திற்கு முக்கிய பொருட்கள்.
- கண்டிப்பாக அபிஷேகத்திற்கு வில்வ இலை பயன்படுத்துவது அவசியம். சிவ லிங்கத்தை ஒரு தாம்பூலத் தட்டில் வைத்து அபிஷேகம் செய்யவும்.
- சிவ லிங்கம் மேல் முழுவதும் வில்வ இலையைப் போட்டு அர்ச்சித்து, நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிய படியே அபிஷேகம் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் சிவ லிங்கத்தை எடுத்து வைத்து அலங்காரம் செய்யுங்கள்.
நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்
முதல் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
- அபிஷேகம் - பஞ்சகவ்யம்
- அலங்காரம் - வில்வம்
- அர்ச்சனை - தாமரை, அலரி
- நிவேதனம் - பால் அன்னம்,சக்கரைபொங்கல்
- பழம் - வில்வம்
- பட்டு - செம்பட்டு
- தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
- மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
- புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
- ஒளி- புட்பதீபம்
இரண்டாம் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
- அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
- அலங்காரம் - குருந்தை
- அர்ச்சனை - துளசி
- நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
- பழம் - பலா
- பட்டு - மஞ்சள் பட்டு
- தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
- மணம் - அகில், சந்தனம்
- புகை - சாம்பிராணி, குங்குமம்
- ஒளி- நட்சத்திரதீபம்
மூன்றாம் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
- அபிஷேகம் - தேன், பாலோதகம்
- அலங்காரம் - கிளுவை, விளா
- அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
- நிவேதனம் - எள்அன்னம்
- பழம் - மாதுளம்
- பட்டு - வெண் பட்டு
- தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
- மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
- புகை - மேகம், கருங் குங்கிலியம்
- ஒளி- ஐதுமுக தீபம்
நான்காம் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
- அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
- அலங்காரம் - கரு நொச்சி
- அர்ச்சனை - நந்தியாவட்டை
- நிவேதனம் - வெண்சாதம்
- பழம் - நானாவித பழங்கள்
- பட்டு - நீலப் பட்டு
- தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
- மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
- புகை - கர்ப்பூரம், இலவங்கம்
- ஒளி- மூன்று முக தீபம்
மேலும் படிக்க:மகா சிவராத்திரி விரதத்தின் போது இந்த சிற்றுண்டிகளை சாப்பிடுங்கள்!
image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation