Mahashivratri Shubh Muhurat 2024: மகா சிவராத்திரி பூஜை; சுப முகூர்த்தம் மற்றும் வழிபாட்டு முறைகள்!

சிவாலயங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அவரர் குல தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதுகின்றனர்

maha sivartiri special

மகா சிவராத்திரிக்காக ஒவ்வொரு சிவாலங்களிலும் ஏற்பாடுகள் தீவிர மடைந்துவருகிறது. சிவபெருமானை எப்போது வழிபடலாம். ஆனால் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரக்கூடிய மகா சிவராத்திரி நாளில் வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் அதிகளவில் உள்ளது. இதனால் தான் சிவராத்திரி நாளுக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

sivaratiru

இந்த 2024 ஆம் ஆண்டில் மார்ச் 8 வெள்ளிக்கிழமை சிவராத்திரி விழாக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானையும், பார்வதியையும் முழு பக்தியுடனுமட், முழுமையான சடங்குகளுடனும் வழிபடுவது மரபு. இருந்தப்போதும் எந்த நேரத்தில் வழிபட வேண்டும்? என்னென்ன வழிமுறைகள்? என்பது குறித்த தகவல்கள் பலருக்கும் தெரியாது. சிவாலங்களுக்குச் சென்றால் அந்தெந்த நேரத்தில் செய்யக்கூடிய வழிபாடுகளில் கலந்துக் கொள்ளலாம். அதே சமயம் கோவில்களுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே வழிபாடுகள் செய்ய திட்டமிட்டிருந்தால் இதோ நல்ல நேரம் எப்பொழுது என தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள். வீடுகளில் மட்டுமல்ல, ஒருவேளை சரியான நேரத்தில் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கும் இந்த தகவல்கள உதவியாக இருக்கும்.

சிவராத்திரி வழிபாட்டிற்கான நல்ல நேரம்:

2024 ஆண்டிற்கான சிவராத்திரி வழிபாடு மார்ச் 8 அதாவது வெள்ளிக்கிழமை இரவு 9.57 மணிக்கு தொடங்கி மார்ச் 9 மாலை 6.17 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் ஒவ்வொரு சிவாலயங்களிலும் நான்கு ஜாம பூஜைகள் செய்யப்பட வேண்டும். முதல் கால பூஜை சிவராத்தியன்று மாலை 6.25 மணி முதல் இரவு 9.28 மணி வரை நடைபெறும். இதில் சிவ பெருமானுக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடத்தப்படும். அடுத்தப்படியாக இரண்டாம் கால பூஜை இரவு 9.28 மணி முதல் 12.31 வரை வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். நிஷிதா கால பூஜை எனப்படும் மூன்றாம் கால பூஜை மார்ச் 9 அன்று 12.31 மணி முதல் அதிகாலை 3.34 வரை நடைபெறும். இதே போன்று நான்காம் கால பூஜை அதிகாலை 3.34 மணி முதல் காலை 6.37 மணி வரை நடைபெறவுள்ளது.

sivaratiri pooja

இந்த ஒவ்வொரு பூஜைகளிலும் சிவபெருமானுக்கு நெய் அபிஷேகம், வில்வ இலை அபிஷேகம், சந்தன காப்பு போன்றவை இடம் பெறும். இரவு முழுவதும் கோவில்களில் அமர்ந்துள்ள சிவ புராணங்களையும், சிவ மந்திரத்தையும் உச்சரித்துக்கொண்டே தங்களது வழிபாடுகளை மேற்கொள்வார்கள். இந்த மாசி மகா சிவராத்திரியில் சிவபெருமானை மனம் உருகி வேண்டுவோருக்கு நினைத்த காரியங்கள் உடனடியாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

kula thriva valipadu

இந்தாண்டு 300 ஆண்டுக்கு பிறகு சிறந்த யோகத்துடன் வரக்கூடிய மகா சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. சிவாலயங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அவரர் குல தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதி குல தெய்வ கோவில்கள் மகா சிவராத்திரி நாளைக் கொண்டாடுகின்றனர்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP