சிவனை உலகம் முழுவதும் வழிபடக்கூடிய மகா சிவராத்திரி வழிபாடு பண்டிகை நாளை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக மகா சிவராத்திரி பால்குண மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் 14 வது நாளில் வருகிறது. இந்த நிகழ்வு பல ஆன்மீக காரணங்களால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. புராணங்களின் படி இந்த நாளில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் ஐக்கியமாகி தாண்டவம் ஆடும் நிகழவும் நடத்தப்பட்டது.
சிவராத்திரி வழிபாடு என்பது இந்தியா முழுவதும் அல்ல தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிவனை வழிபடக்கூடிய பொதுமக்கள் அனைவரும் வீட்டில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வார்கள். குறிப்பாக பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரதம் இருந்து சிவ வழிபாட்டில் ஈடுபட்டு வருவது வழக்கம். சிவபெருமானை வழிபட பொதுமக்கள் ஒன்று கூடி தங்களின் இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தை வணங்கி சிவபெருமானை நினைத்து பஜனைகள் பாடி இரவு முழுவதும் விழித்திருந்து சிவராத்திரி வழிபாடு செய்வார்கள்.
சிவராத்திரி தினத்தில் சிவனை வழிபட இரவு முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் விரதம் இருக்கும் நேரத்தில் உடலில் ஆற்றலை தக்க வைக்கும் எளிதில் ஜீரணமாக கூடிய அனைவருக்கும் பிடித்த லேசான சிற்றுண்டிகளின் வகைகளை இப்பதிவில் விரிவாக காணலாம்.
சிவராத்திரி வழிபாட்டில் விரதம் இருக்கும் நேரத்தில் பழங்கள் முதல் கஸ்டர்ட்ஸ் வரை பல்வேறு சிற்றுண்டிகளை விரத நேரத்தில் நீங்கள் சாப்பிட்டு முயற்சி செய்யலாம். இந்த சிற்றுண்டிகள் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. இந்த லேசான சிற்றுண்டிகள் உங்கள் மனதை புத்துணர்ச்சியோடு வைத்திருந்து சிவ வழிபாடு விரதத்தை கடைபிடிக்க ஏதுவாக இருக்கும். குறிப்பாக இரவு முழுவதும் உங்களை ஆற்றலோடு விழித்திருக்க வைக்க இந்த சிற்றுண்டிகள் பெரிதும் உதவும்.
மகா சிவராத்திரி இரவு விரதத்திற்கு சரியான சிற்றுண்டி வகைகள்
பழ கஸ்டர்ட்
இறை வழிபாட்டில் தவிர்க்க முடியாத உணவு வகைகளில் பஞ்சாமிர்தம் இருக்கும். அதற்கு ஈடாக இந்த பழங்கள் கஸ்டர்ட் அமையும். இது சுவையான விருந்தாகும். புத்துணர்ச்சியூட்டும் சுவைக்காக துளசி மற்றும் புதினா போன்ற மூலிகைகளால் இதை அலங்கரிக்கலாம். மேலும் இதில் சுவையை அதிகரிக்க வேக வைத்த பழங்கள் கிரீமி சுவையுடன் சேர்த்தால் சுவை அதிகரிக்கும். இதில் கூடுதல் சுவைக்காக சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை சேர்த்து மகா சிவராத்திரி வழிபாடு விரதத்தை கடைபிடிக்கவும்.
காரச்சேவு
தமிழர்களின் சிற்றுண்டி பட்டியலில் முக்கிய பங்கு வகிப்பது காரச்சேவு. இது மாவுடன் தயாரிக்கப்படுகிறது. அவற்றின் நுட்பமான அளவு அற்புதமான சுவை கொண்டது. மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் இது ஒரு லேசான சிற்றுண்டியாக கருதப்படுகிறது. குறிப்பாக லேசான மசாலா பொருட்களை சேர்ப்பதன் மூலம் இது உடலுக்கு நீண்ட ஆற்றலைத் தரும்.
ஜவ்வரிசி வடை
ஜவ்வரிசி வடை என்பது விரத காலத்தில் அனைவருக்கும் தேவையான சிற்றுண்டி ஆகும். ஜவ்வரிசி பயன்படுத்தி நாம் பாயாசம் சாப்பிடுவோம் அதற்கு மாற்றாக ஜவ்வரிசியை வறுத்து மாவு கலந்து வடையாக செய்யும் போது இது ஆரோக்கியமான விரத உணவாக மாறும். இந்த ஜவ்வரிசி வடையை நீங்கள் தயிர்சாதத்துடன் அல்லது பச்சை சட்னி செய்து சேர்த்து சாப்பிடலாம்
வறுத்த உருளைக்கிழங்கு
விரத காலங்களில் யோசிக்காமல் சுதந்திரமாக உண்ணக்கூடிய காய்கறிகளில் உருளைக்கிழங்கு ஒன்றாகும். வறுத்த உருளைக்கிழங்கின் சுவையான பிட்களில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் நிரம்பியுள்ளன. அவை உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும். உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் லேசான மசாலா பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இது சிவராத்திரி வழிபாட்டின் போது இரவு நேர விரதத்திற்கு ஏற்ற உணவாகும்.
உருளைக்கிழங்கு கட்லெட்
உருளைக்கிழங்கு போண்டா செய்வது மிகவும் எளிய வழிமுறையாக இருக்கும். இந்த செய் முறையானது மாவின் சுவை மற்றும் உருளைக்கிழங்கின் மிருதுவான சுவை ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்கிறது. உருளைக்கிழங்கு போண்டா செய்யும்போது மாவில் பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்து செய்ய வேண்டும். இந்த ரெசிபியை டீப் ப்ரை அல்லது ஏர் ப்ரை செய்யலாம். நாம் நீண்ட நேரம் விழித்திருக்கும் போது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க இந்த உருளைக்கிழங்கு போண்டா சரியான தேர்வாகும்.
உப்பு வேர்க்கடலை
உப்பு வேர்க்கடலை உண்ணாவிரதத்திற்கு மிகவும் எளிமையான சிற்றுண்டி ஆகும். வேர்க்கடலையில் உடலுக்கு ஆற்றலை சேர்க்கும் சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதனால் விரதம் இருக்கும் போது பசி உணர்வை தடுக்க சிறந்த சிற்றுண்டியாக உப்பு வேர்க்கடலை இருக்கும். வேர்க்கடலையை லேசாக வறுத்தெடுப்பதால் அதிலிருந்து இயற்கையான எண்ணெய்யைகள் வெளியேறி சாப்பிட சுவையாக இருக்கும்.
பழ சாலட்
ஃப்ரூட் சாலட் ஆப்பிள்,திராட்சை, கிவி ஸ்ட்ராபெரிகள் மற்றும் வாழைப்பழங்கள், கொய்யா போன்ற பழங்களின் பரந்த வகைப்படுத்தலை ஒருங்கிணைத்து செய்யப்படுவதாகும். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் விருந்தாகும். இதில் எலுமிச்சை சாற்றை சிறிது சேர்த்தால் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இதை குளிர்ச்சியாக பரிமாறுவது சுவையை அதிகரிக்கும் மேலும் இதன் மேல் மாதுளை சுளைகளை தூவி விட்டு அலங்கரித்து சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.
இந்த புத்துணர்ச்சியூட்டும் சுவையான உணவுகள் மகா சிவராத்திரி விரத நேரத்தில் உங்களை உற்சாகமாகவும் உடலை ஆற்றல் ஆகவும் வைத்திருக்க உதவும். மேலும் உங்களின் ஆன்மீக விரதத்திற்கு சரியான உணவு தேர்வு வகைகளாக இவை கட்டாயம் இருக்கும். இந்த உணவுகளை எடுத்துக் கொண்டு சிவராத்திரி உண்ணாவிரதத்தை நீங்கள் கடைபிடிக்கும் போது இது மறக்க முடியாத நிகழ்வாக மாறும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation