இன்றைய தலைமுறையினர் காணும் பொங்கல் என்றால் குடும்பத்தினர், நண்பர்களுடன் சுற்றுலா தலத்திற்கு சென்று பொழுதை மகிழ்ச்சியாக கழித்து வீடு திரும்புவதாக நினைக்கின்றனர். பண்டைய காலத்தில் காணும் பொங்கல் உறவுகளை ஒருங்கிணைக்கும் நாளாக பார்க்கப்பட்டது. இதை கன்னிப் பொங்கல், கணும் பொங்கல் என்றும் அழைத்தனர். அன்றைய காலத்தில் காணும் பொங்கல் ஒருவரை ஒருவர் சந்தித்து நல்லாசி பெரும் நாளாக கொண்டாடினர். பண்பாடு, பணிவு வளர்க்கவும் நாளாகவும் காணும் பொங்கல் விளங்குகிறது.
காணும் பொங்கல் முக்கியத்துவம்
காணும் பொங்கலன்று நீர்நிலைகளுக்கு சென்று நீராடி வழிபாடு நடந்ததற்கான குறிப்புகளை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பரிபாடலில் மார்கழி நீராடல், தை நீராடல் பற்றி தகவல் உள்ளது.
காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் விதவிதமான உணவுகளைத் தயாரித்து நீர்நிலைகளுக்கு குடும்பத்தினரோடு செல்வார்கள். அதாவது இயற்கைவெளியில் பொழுதை கழிப்பார்கள். நீர்நிலைகளுக்கு சென்ற பிறகு விவசாயம் செழிக்க உதவும் நீரையும் தங்களுடைய குல தெய்வத்தையும் வழிபடுவார்கள்.
காணும் பொங்கல் கொண்டாட்டம்
இதற்காக மார்கழி மாதத்தில் தினமும் கோலம் போடும் போது பயன்படுத்திய சானத்தை காய வைத்து எருவட்டி தயாரிப்பார்கள். அவற்றை காணும் பொங்கல் நாளில் நீர்நிலைகளுக்கு கொண்டு வந்து சூடம் பொறுத்தி குலவையிட்டு தண்ணீருக்குள் விடுவார்கள். இதை தொடர்ந்து வீட்டில் சமைத்த உணவுகளை அனைவருடன் பகிர்ந்து மகிழ்வார்கள். கொண்டாட்டத்திற்கு வந்த சிறு குழந்தைகள் ஆங்காங்கே ஓடிப் பிடித்து விளையாடுவார்கள். காணும் பொங்கல் என்றாலே உறவு, உணவு, உணர்வுகளை வெளிப்படுத்துவது என நினைவில் கொள்ளுங்கள்.
பொங்கல் காசு
வெளியே சென்று சுற்றுவதோடு காணும் பொங்கல் கொண்டாட்டம் முடிந்துவிடக்கூடாது. இந்த நாளில் நாம் நன்றாக வாழ்வதற்கு வாழ்த்தி எப்போதும் உறுதுணையாக இருந்து நமக்கு நல்லதே நினைக்கும் நபர்களை சந்தித்து வணங்கி ஆசி பெற வேண்டும். பொங்கல் காசு என்ற பழக்கத்தை பெரியவர்கள் காணும் பொங்கல் நாளில் தொடங்கினர். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதோடு மட்டுமின்றி அவர்களுக்கு ஏதாவது ஒரு பரிசை அளிக்கவும்.
மேலும் படிங்க Mattu Pongal : உழவனின் தோழனை வளர்க்கும் தமிழ் உறவுகளுக்கு மாட்டு பொங்கல் நல்வாழ்த்துகள்
கிராமத்து வாசிகள் ஆற்றங்கரை, குளம், கடற்கரை போன்ற நீர்நிலைகளுக்கு சென்று காணும் பொங்கல் கொண்டாடலாம். நகரத்துவாசிகள் உங்களுக்கு அரட்டை அடிக்க ஏதுவான இடங்களுக்கு நண்பர்களுடன் செல்லுங்கள். பொங்கல் பண்டிகைக்கு கிடைக்கும் விடுமுறை காரணமாக வேலை, அலுவலக பணிகளுக்கு சற்று ஓய்வளித்து நண்பர்கள், உறவுகளுடன் பொது இடத்தில் கூடி கலகலப்புடன் பேசி மகிழ்ந்து கொண்டாடும் நாளே காணும் பொங்கல் திருநாள். இந்த நிகழ்வின் போது திருமணப் பேச்சுகளும் நடக்கும்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation