Mattu Pongal : உழவனின் தோழனை வளர்க்கும் தமிழ் உறவுகளுக்கு மாட்டு பொங்கல் நல்வாழ்த்துகள்

உணவின்றி நாமில்லை உழவின்றி அந்த உணவில்லை. இதை சாத்தியப்படுத்த வாழ்நாள் முழுக்க விவசாய களத்தில் உழைக்கும் ஜீவனை கெளரவிக்கும் நாளே மாட்டு பொங்கல். இந்த நாளில் வீட்டு விலங்கான மாட்டை மகன், தம்பி, நண்பன் போல அன்பு செலுத்தி வளர்க்கும் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் அனுப்ப வேண்டிய மாட்டு பொங்கல் வாழ்த்து, கவிதைகள், குறுஞ்செய்திகள் இங்கே...
image

மனிதனின் வாழ்க்கையில் உடன் பிறக்காத சகோதரனாக தொழுவத்தில் பால் கொடுக்கும் பசுவாக, உழவு களத்தில் ஏர் கலப்பை சுமக்கும் தோழனாக, ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து துள்ளி விளையாடும் காளையாக விளங்கும் உயிரினத்திற்கு நன்றி செலுத்துவதே இந்த மாட்டு பொங்கல். உணவு இன்றி யாராலும் உயிர் வாழ இயலாது. அந்த உணவை விவசாய களத்தில் இருந்து பெறுவதற்கு உதவிகரமாக விளங்கும் மாடுகளை வளர்க்கும் நபர்களுக்கு மாட்டு பொங்கல் நாளில் அனுப்ப வேண்டிய வாழ்த்துகள், கவிதைகள், குறுஞ்செய்திகள் இங்கு பகிரப்பட்டுள்ளது.

Mattu Pongal Greetings

மாட்டு பொங்கல் வாழ்த்து 2025

  • உழவனின் பிரியமான தோழனுக்கு இன்று பொங்கல்... பொங்கலோ பொங்கல்... மாட்டு பொங்கல் வாழ்த்துகள்
  • வீரத்தின் அடையாளமாக, விவசாயிகளின் தோழனாக, கிராம மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக, தெய்வமாகக் கொண்டாடப்படும் பசு மற்றும் காளைகளின் பண்டிகையாம் மாட்டுப் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம்... அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
  • விவசாயிகளுக்கு துணை நிற்கும் இயற்கையையும், கால்நடைகளையும் இந்நாளில் வணங்கி நன்றி செலுத்துவோம்
  • களைப்பறியாது உழைக்கும் உனக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன்... மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்
  • இவ்வுலகில் தாய்ப்பால் அருந்தாமல் வளர்ந்தவர் பலர்... பசும் பால் அருந்தாமல் வளர்ந்தவர் இலர்... அனைத்து உறவுகளுக்கும் அன்பார்ந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்
  • ஏர் கலப்பைகளை சுமந்து நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயத்திற்கு தோள்கொடுக்கும் எருதுகளை போற்றுவோம். மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
  • உழவுக்கு உறுதுணை புரியும் மாடுகளுக்கும், இயற்கைக்கும் நன்றி உரைத்துப் பொங்கலிடும் நாள் மாட்டுப் பொங்கல் திருநாள்
  • விவசாயிகளையும் விளை நிலங்களையும் செழிப்புடன் வைத்திருக்க தன் உழைப்பை வெளிப்படுத்தும் வீட்டு விலங்கிற்கு இந்த திருநாளில் நன்றி செலுத்துவோம்... மாட்டு பொங்கல் வாழ்த்துகள்
  • ஆறு மாதம் அன்னையின் முளைப்பால் அருந்தினோம்... ஆயுள் முழுவதும் உந்தன் மடிப்பால் அருந்தினோம்... எங்களின் இரண்டாம் தாயும் நீயே... குடும்பம் செழிக்க உதவும் கோமாதாவும் நீயே... உன்னை வணங்கவே உனக்கொரு பண்டிகை
  • மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து... நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு... தோள்கொடுக்கும் எருதுகளை போற்றுவோம்... மாட்டு பொங்கல் வாழ்த்துகள்
  • மனிதனுக்கு பால் கொடுத்து... உழவனுக்கு தோள் கொடுத்து... மனித இனத்திற்கு தன்னையே கொடுத்து... மாண்டு போகும் மாட்டுக்கு நன்றி தெரிவிப்போம்... மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்
  • விவசாயத்தின் தோழனான் உழவனின் தொண்டனாய்... வீரத்தின் அடையாளமாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம்... இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துகள்
  • உழைத்து களைத்த உழவர்களுக்கு ஒரு நாள்... உழவர் திருநாள்! உழைத்து களைத்த உனக்கு ஒரு நாள்... மாட்டுப் பொங்கல்! விவசாயிகள் அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்
  • உழவர்களின் தோழனை கொண்டாடும் மக்களுக்கு இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துகள்

மேலும் படிங்கPongal Wishes : எந்நாளும் வாழ்க்கை தித்திக்க தமிழர் திருநாளில் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

மாட்டு பொங்கல் நாளில் எட்டு திசைக்கும் தவறாமல் அண்ணாமலை படத்தின் வந்தேன்டா பால்காரன் பாடல் ஒலிக்கும். இதில் பசுமாடு நமக்கு மனிதர்களுக்கு அளிக்கும் நன்மைகளை அழகாக விவரித்து இருப்பார்கள். நீங்களும் வீட்டில் மாடு வளர்ப்பவராக இருந்தால் மாட்டு பொங்கலன்று ஒலிக்க விடுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP