கர்ப்பமாக இருக்கும் போது ஒரு பெண்ணை ஒட்டுமொத்த குடும்பமும் நன்கு கவனிக்கும். ஆனால் பிரசவித்த பிறகு அனைவரின் கவனமும் குழந்தையின் பக்கம் திரும்பி விடுகிறது. பிரசவித்த பெண்ணின் மீது முன்பை போல கவனம் செலுத்துவதில்லை. இது மிகவும் தவறு. உடல்நலம் பேணுவதால் மட்டுமே குழந்தையை வளர்ப்பதில் சிரமம் இருக்காது.
இது தொடர்பாக பல பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எப்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல்எடையைக் குறைக்கலாம் என பிரசவித்த இரண்டு வாரங்களிலேயே சிந்திக்க தொடங்கிவிடுகின்றனர். சுகப்பிரசவமாக இருந்தாலும் அறுவைசிகிச்சை மகப்பேறு இருந்தாலும் முதல் மூன்று மாதம் அதாவது 12 வாரம் பிரசவித்த பெண் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும்.
இந்த மூன்று மாதங்களில் ஒரு தாயாக நமது முழு கவனம் குழந்தை பராமரிப்பில் இருக்கும். ஆனால் உடற்பயிற்சி என அடுத்தக்கட்டத்தை பற்றி நினைக்கும் போது மூன்று மாதத்திற்கு பிறகே ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக உடற்பயிற்சியை ஆரம்பிக்க கூடாது. உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் போது மன அழுத்த அளவு, உணர்வுகளை வெளிப்படுத்தும் அளவில் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதால் உங்களுக்கு கண்டிப்பாக ஆற்றல் இழப்பு இருக்கும். இதனால் அதிகமாக சாப்பிடுவோம். உடைஎடை அதிகரிப்பு, தொப்பை, தழும்பு ஆகியவற்றை பற்றி பிரசவித்த உடனேயே சிந்திக்க கூடாது. தயவு செய்து மனதில் இருந்து இந்த எண்ணத்தை நீக்கி விடுங்கள். முதல் மூன்று மாதங்களில் குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுவது அவசியம். இந்த நேரத்தில் உடலின் வடிவத்தைப் பற்றி கவனிக்க கூடாது.
மேலும் படிங்கஒன்பது மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
தாய்ப்பால் கொடுப்பதால் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். தாய்ப்பால் கொடுக்க 600 கலோரிகள் வரை கூடுதலாக உட்கொள்ள வேண்டி இருக்கும். எனவே காய்கறி, பழம், மூன்று டம்ளர் பால் குடிக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். தாய்ப்பாலில் தண்ணீரின் பங்கும் அதிகம் இருக்கிறது. இயல்பாக தூங்க முடியாது. கிடைக்கும் நேரங்களில் தூங்கி விடுங்கள்.
மூன்று மாதங்களுக்கு என்ன பயிற்சி செய்யலாம் ?
- தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செல்லுங்கள். குறைந்தது 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் படிகள் நடக்கவும்.
- நீங்கள் ஜிம் சென்று கொண்டிருந்த நபராக இருந்தாலும் உடனடியாக அதிதீவிர
- பயிற்சியில் ஈடுபடக் கூடாது.
- சைக்கிளிங் மற்றும் ஜாக்கிங் செல்லலாம்.
- நீங்கள் பிரசவித்த போது தசைகள், திசுக்களில் காயம் ஏற்பட்டு இருக்கும்.
- அதே போல கர்ப்பப்பை இயல்பான நிலைக்கு வர வேண்டும். இதற்கு ஆறு வாரங்கள் ஆகும்.
- மூன்று மாதங்களுக்கு பிறகு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.
மேலும் படிங்கசுகப்பிரசத்தில் குழந்தையை பெற்றெடுக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation