குழந்தை வளர்ப்பில் எப்போதுமே ஒன்பது மாதம் முதல் 12 மாதம் மிகவும் முக்கியானது. இந்த மூன்று மாதங்களுக்குள் நாம் குழந்தையை வீட்டு உணவிற்கு பழக்கப்படுத்த வேண்டும். ஒரு வயது முதல் குழந்தைக்கு வீட்டு உணவுகளைத் தவிர வேறு எதுவும் கொடுக்க கூடாது. அதனால் ஒன்பது மாதங்களிலேயே குழந்தையை வீட்டு உணவிற்கு பழக்கப்படுத்த ஆரம்பிப்பது அவசியம். ஒன்பது மாதத்தில் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒன்பது மாதத்தில் குழந்தைக்கு pincer grasp என்று சொல்லக்கூடிய தன்மை வருகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் குழந்தைக்கு ஒரு சின்ன பொருளை எடுத்து தனது வாயில் போட முடியும். இரு கைகளையும் உபயோகிப்பது வேறு ஆள் காட்டி விரல் மற்றும் கட்டை விரலை பயன்படுத்தி ஒரு பொருளை எடுப்பது வாயில் போடக்கூடிய தன்மை குழந்தைக்கு ஒன்பது மாதங்களில் வந்து விடும்.
இது போன்ற சமயங்களில் குழந்தைக்கு நாம் ஊக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் விரலில் எடுத்து சாப்பிடும் அளவிலான உணவுகளை அருகில் வைக்கலாம். ஒன்பது மாதங்களுக்கு பிறகும் அவர்களுக்கு உணவுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து வாயில் ஊற்றினால் அது மிகவும் தவறு. ஒன்பது மாதங்களில் குழந்தைக்கு கண்டிப்பாக வாய் மற்றும் கை ஒருங்கிணைப்பு வந்துவிடும். வெளிநாடுகளில் குழந்தைக்கு ஒன்பது மாதங்களிலேயே ஸ்பூன் கொடுத்து சாப்பிட பழக்கப் படுத்துவார்கள்
ஒன்பது மாதங்கள் முதல் 12 மாதங்களுக்கு குழந்தைக்கு கொடுக்கும் உணவை Finger Foods என சொல்லலாம். ஒன்பது மாதங்கள் வரை குழந்தைக்கு சுவை இல்லாத உணவுகளை கொடுத்தாலும் அவற்றை குழந்தைகள் சாப்பிட்டு விடும். ஆனால் ஒன்பது மாதங்களுக்கு பிறகு குழந்தைககளின் சுவை அரும்பின் தூண்டுதல் இருக்கும். எனவே வீட்டில் நமக்கு சமைக்கும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
மேலும் படிங்கமகளிர் கவனத்திற்கு! சீக்கிரம் கர்ப்பம் தரிப்பதற்கான வழிகள்...
உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளை நன்கு வேக வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவற்றை குழந்தைகள் தானாகவே மென்னு சாப்பிடும். எட்டு மாதங்களுக்கு மேலாகவே குழந்தைக்கு பவுடர் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சாதத்தை குழைய வைத்து அதில் சாம்பார் ஊற்றி பிசைந்து குழந்தைக்கு கொடுக்கலாம். இட்லி, தோசை, சாப்பாடு ஆகியவற்றை ஒன்பது மாதங்களில் இருந்து கொடுக்க ஆரம்பிக்கவும். சாப்பாத்தியை குழம்பில் நன்கு ஊற வைத்து கொடுக்கலாம். தொண்டையில் சிக்கி கொள்வது போல் எந்த உணவையும் கொடுக்க கூடாது.
முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகளையும் வேக வைத்து குட்டி குட்டியாக நறுக்கி கொடுக்கலாம். அப்போது தான் மென்னு சாப்பிடும் பழக்கம் வரும். முழு பிஸ்கட்டை அப்படியே கொடுக்க கூடாது. ஒன்பது மாதங்களில் குழந்தையை வீட்டு உணவிற்கு பழக்கவில்லை என்றால் மூன்று வயதானாலும் பவுடர் உணவுகளின் உட்கொள்ளல் தொடரும். இந்த தவறை செய்யாதீர்கள்.
மேலும் படிங்கதேர்வுக்கு தயாராகும் குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய உதவிகள்
அதே போல குழந்தையின் எடையை அதிகரிக்க உணவில் நெய் அதிகப்படுத்தி கொடுக்கலாம். குழந்தைக்கு நிச்சயமாக கூடுதல் கலோரி கிடைத்து உடல் எடை அதிகரிக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation