பயோட்டின் சத்து குறைபாடு இருந்தால் உங்களுக்கு முடி உதிர்வு அல்லது கூந்தல் வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும். வைட்டமின் பி7 என்றும் அழைக்கப்படும் பயோட்டின், கெரட்டின் உற்பத்தியை அதிகரித்து, முடியை உள்ளிருந்து வலுப்படுத்துகிறது. பயோட்டின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட, அதை உணவின் மூலம் பெறுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அந்த வகையில் பயோட்டின் சத்து நிறைந்த ஐந்து உணவுகளையும், அவற்றை எடுத்துக் கொள்ளும் முறையையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Hair fall home remedy: ஒரு முட்டை இருந்தால் போதும்... முடி உதிர்வு பிரச்சனையை போக்கலாம்; இந்த 4 ஹேர்மாஸ்கை ட்ரை பண்ணுங்க
ஆரோக்கியமான கூந்தலுக்கு தேவையான பயோட்டின் மற்றும் புரதச்சத்து இரண்டையும் முட்டையில் இருந்து சுலபமாக பெற்றுக் கொள்ளலாம். முட்டையின் மஞ்சள் கருவில் பயோட்டின் இருப்பதால், அதைத் தவிர்க்காமல் சாப்பிடுங்கள். முட்டையை அவித்தோ, பொரித்தோ அல்லது ஆம்லெட்டாகவோ உங்களுக்கு பிடித்த வகையில் வாரத்திற்கு 3-4 முறை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், முட்டையின் மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, ஹேர் மாஸ்க் போலவும் பயன்படுத்தலாம்.
பாதாமில் பயோட்டின், வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்துகள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உச்சந்தலைக்கு உள்ளிருந்தே ஊட்டத்தை அளிக்கிறது. ஒரு நாளைக்கு 8-10 பாதாம் பருப்புகள் போதுமானது. இவற்றை இரவில் ஊறவைத்து, காலையில் தோலை உரித்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பயோட்டின் மட்டுமல்ல, உங்கள் உடல் வைட்டமின் ஏ-ஆக மாற்றும் பீட்டா-கரோட்டீனும் அதிகம் உள்ளது. இது முடியின் வேர்க்கால்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதனை வேகவைத்தும், மசித்து குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். வாரத்திற்கு 2-3 முறை சாப்பிடுவது நல்லது. சத்துகள் முழுமையாக கிடைக்க, ஆலிவ் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க: ஆளி விதை தரும் அதிசய பலன்கள் தெரியுமா? அடர்த்தியான கூந்தலுக்கு இதுதான் ரகசியம்!
இந்த சிறிய விதைகளில் பயோட்டின், சின்க் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் முடியை பளபளப்பாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இதனை சாலடுகள், ஸ்மூத்தி அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். உப்பு சேர்க்காத, வறுத்த அல்லது வறுக்காத விதைகளை தேர்வு செய்யுங்கள்.
கீரை, உங்கள் தலைமுடிக்கு ஒரு முழுமையான ஊட்டச்சத்து பெட்டகம் போன்றது. இதில் பயோட்டின், இரும்புச் சத்து, ஃபோலேட் (folate) மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துகள் உள்ளன. இவை அனைத்தும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடியை வலுப்படுத்துகின்றன. கீரையை சாலட், ஸ்மூத்தி அல்லது பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிடலாம். நல்ல பலன்களை பெற வாரத்திற்கு 3-4 முறை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கூந்தல் வளர்ச்சிக்கு சற்று நேரம் எடுக்கும் என்பது நிதர்சனம். இதன் காரணமாக குறைந்தது இந்த உணவுகளை 8-12 வாரங்களுக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் கூந்தல் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை காணலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com