herzindagi
washing machine cleaning tamil

How to Clean Washing Machine : வாஷிங் மெஷினை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா?

பேக்கிங் சோடா மற்று வினிகரை கொண்டு வாஷிங் மெஷினை சுத்தம் செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்த முறையை பின்பற்றினால் போதும். 
Editorial
Updated:- 2023-05-12, 09:47 IST

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வாஷிங் மிஷின் மிக மிக முக்கியமானது. துணியில் இருக்கும் அழுக்கை போக்கும் இந்த பொருளில் அழுக்கு சேர்வது என்பது பொதுவான ஒன்று. இதை எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம். இந்த பதிவில் வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை வைத்து எப்படி வாஷிங் மிஷினை சுத்தம் செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சமையல் சோடா
  • வினிகர்

இந்த பதிவும் உதவலாம்:கிச்சனில் அடிக்கும் நாற்றத்தை விரட்ட என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பயன்படுத்தும் முறை

  • சமையல் சோடா மற்றும் வினிகரை நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இப்போது பேஸ்டை வாஷிங் மெஷினில் அனைத்து இடங்களிலும் தடவி 15 நிமிடம் அப்படி ஊற விடவும்.
  • பின்பு ஸ்க்ரப்பரை பயன்படுத்தி அனைத்து இடங்களையும் நன்கு தேய்க்கவும்.
  • இப்போது காட்டன் துணியை எடுத்துக்கொண்டு தண்ணீரில் நனைத்து வாஷிங் மெஷினை துடைத்து விடவும்.

washing machine deep cleaning

மற்றொரு முறை

  • முதலில் 1-2 லிட்டர் தண்ணீரை சூடுப்படுத்தி வெதுவெதுப்பாக எடுத்து கொள்ளவும்.
  • இப்போது அதில் 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இதன் பின்பு இந்த கலவையை நன்கு ஆற வைக்கவும்.
  • இப்போது இந்த நீரில் காட்டன் துணியை போட்டு நனைத்து எடுக்கவும்.
  • அதை வைத்து அழுக்கு படிந்த வாஷிங் மிஷினை துரைத்து எடுக்கவும்.

குறிப்பு: புதியதாக மிஷின் வாங்கி இருப்பவர்கள் அல்லது ஏற்கெனவே மிஷினில் பிரச்சனை இருந்தால் இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன்பு சர்வீஸ் டீமிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்:வீட்டில் இருக்கும் சோபாவை சுத்தம் செய்வது எப்ப்டி?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com