வினிகரில் வெதுவெதுப்பான நீர் மற்றும் துணி துவைக்கும் லிக்வியூட் ஆகியவற்றை சேர்த்து அதை கொண்டு வெள்ளை சோபாவை சுத்தம் செய்யவும். கறைகள் நொடிப்பொழுதில் மறைந்து விடும்.
பாத்திரம் கழுவும் டிஷ் சோப்பில் வெதுவெதுப்பான நீரை சேர்க்கவும். இந்த கலவை, விடாபிடியான சோபா கறைகளை எளிதில் அகற்ற உதவுகிறது.பேக்கிங் சோடாவில் தண்ணீரைக் கலந்து கெட்டியான பேஸ்ட் போல் தயார் செய்யவும். பின்பு, கறை படிந்த இடத்தில் தடவி சுத்தம் செய்யவும். இது ஒரு கறை நீக்கியாக செயல்படுகிறது.
ஃபோம் கிளீனர் அல்லது கார்பெட் கிளீனரை கறை படிந்த இடத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பின்பு சுத்தம் செய்யவும். இவை வெள்ளை சோபாவில் உள்ள கறைகளை நீக்கும். ரப்பிங் ஆல்கஹாலை காட்டன் பஞ்சில் நனைத்து அதை சோபாவில் கறை படிந்த இடத்தில் தடவி சுத்தம் செய்யவும். லெதர் மற்றும் மைக்ரோஃபைபர் சோபா வகைகளில் மட்டுமே இதை பயன்படுத்தவும்.
நீங்களும், உங்கள் வீட்டின் வெள்ளை நிற சோபாவில் படிந்து இருக்கும் கறைகளை இந்த வழிமுறைகளைப் பின்பற்றி அகற்றலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com