herzindagi
image

பட்டுப் புடவை பராமரிப்பு: செலவில்லாமல் வீட்டிலேயே புதிது போன்று மாற்றுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்

பட்டுப் புடவைகளை வாங்குவதை விட அதனை பராமரிப்பது மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும். அந்த வகையில், பட்டுப் புடவையை எவ்வாறு வீட்டிலேயே சரியான முறையில் அலசி சுத்தம் செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் காணலாம்.
Editorial
Updated:- 2025-10-25, 18:21 IST

நமது தமிழ் பாரம்பரியத்தில் பட்டுப் புடவைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. எந்த ஒரு சுபநிகழ்ச்சியும் பட்டுப் புடவைகள் இன்றி நிறைவு பெறுவதில்லை. அதன் காரணத்தினால் பெரும்பாலான பெண்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு அங்கமாக பட்டுப் புடவைகள் விளங்குகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பட்டுப் புடவைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அதனை மரியாதையாக கருதுகின்றனர்.

மேலும் படிக்க: உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை மிச்சப்படுத்த வேண்டுமா? இந்த எளிய குறிப்புகளை பின்பற்றினால் போதும்

 

இவ்வளவு மதிப்புமிக்க பட்டுப் புடவைகளை சரியான முறையில் பராமரிப்பது மிகுந்த சவாலான காரியம் ஆகும். ஏனெனில், மற்ற துணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இவற்றுக்கு அதிக கவனிப்பு தேவைப்படும். இதனை சாதாரணமாக துவைக்க முடியாது என்ற காரணத்தினால், வெளியே டிரை வாஷ் கொடுக்க வேண்டியதாக இருக்கும். ஆனால், இதில் பலருக்கு திருப்தி இருக்காது. அந்த வகையில், வீட்டிலேயே பட்டுப் புடவையை சிம்பிளாக அலசி பராமரிக்கலாம்.

 

பட்டுப் புடவை பராமரிப்பு:

 

பட்டுப் புடவையை என்ன மாதிரியான நீரில் அலசுகிறோம் என்பது மிகவும் முக்கியம். இதற்காக சாதாரண தண்ணீர் அல்லது சுடுதண்ணீரை பயன்படுத்தக் கூடாது. நன்கு குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்போது தான் பட்டுப் புடவையின் நிறம் மற்றும் தன்மை மாறுபடாமல் இருக்கும். இப்போது, அரை வாளி குளிர்ந்த நீரில் துணி துவைக்க பயன்படும் லிக்விட்டை தேவையான அளவிற்கு ஊற்றி கலக்க வேண்டும்.

Saree

 

இப்போது, ஒரு சிறிய துண்டு காட்டனை இந்த வாளி தண்ணீரில் போட்டு அதன் நிறம் மாறி இருக்கிறதா என்று சோதித்து பார்க்க வேண்டும். அந்தக் காட்டன் துண்டின் நிறம் மாறவில்லை என்பதை உறுதி செய்த பின்னர், அலச வேண்டிய பட்டுப் புடவையை அந்த வாளி தண்னீரில் ஊற வைக்கலாம்.

மேலும் படிக்க: வீட்டுத் தோட்டத்தில் குங்குமப்பூ வளர்ப்பு: சிறிய இடம் இருந்தால் போதும்; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

 

பட்டுப் புடவையை அலசும் முறை:

 

இனி பட்டுப் புடவையை ஊற வைப்பதற்கு முன்பாக அதன் பார்டர் பகுதியை மட்டும் சிறிய நூல் கொண்டு கட்டிவிட வேண்டும். அதன் பின்னர், புடவையின் உடல் பகுதியை வாளியில் இருக்கும் தண்ணீரில் ஊற வைக்கலாம். இப்படி செய்யும் போது, பார்டர் பகுதியில் சாயம் ஒட்டாமல் இருக்கும். தண்ணீரில் புடவை மூழ்கியதும் அதன் நூல் முடிச்சை பிரித்து விடலாம். குறிப்பாக, ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் தண்ணீரில் புடவையை ஊற வைக்க வேண்டும்.

Saree wash

 

இதற்கடுத்து, ஊறவைத்த புடவையை வெளியே எடுத்து அதனை வேறு ஒரு வாளியில் இருக்கும் குளிர்ந்த நீரில் மெதுவாக அலச வேண்டும். இப்போது புடவையில் ஏதேனும் கறைகள் தென்பட்டால், அதனை கைகளால் தேய்த்து அகற்றலாம். எக்காரணத்தை கொண்டும் பிரஷ் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு நன்கு அலசிய பின்னர் புடவையை பிழியாமல் அப்படியே நிழலில் காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பட்டுப் புடவை புதியது போன்று பொலிவாக இருக்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com