herzindagi
bad smell from kitchen

Kitchen Smell : கிச்சனில் அடிக்கும் நாற்றத்தை விரட்ட என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சிலரது வீட்டில் இருக்கும் கிச்சனில் எப்போதுமே ஒருவிதமான நாற்றம் வீசும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட எளிமையான இந்த வழிமுறைகளை முயற்சி செய்து பாருங்கள்.  துர்நாற்றம் வீசுவதற்கான காரணத்தையும் இங்கு பார்க்கலாம். 
Editorial
Updated:- 2023-05-04, 09:50 IST

நம் வீட்டு கிச்சனில் மசாலா டப்பாக்கள் தொடங்கி கடைகளில் விற்கப்படும் ஏகப்பட்ட ஜாமான்கள் வரை அனைத்தும் அடைந்து கிடைக்கும். இவை காலப்போக்கில் ஒருவிதமான துர்நாற்றத்தை கிச்சன் முழுவதும் பரப்பும். இதனால் கிச்சனில் நின்று சமைப்பது சிரமாக உணரப்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட எளிமையான இந்த வழிமுறைகளை முயற்சி செய்து பாருங்கள்.

கற்பூரத்தை பேப்பரில் வைத்து மடித்து அதை கிச்சனில் வெவ்வேறு மூலைகளில் வைக்கவும். இது கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை நீக்க உதவும். 10 நாட்களுக்கு ஒருமுறை கற்பூரத்தை எடுத்து வேற கற்பூரத்தை மாற்றி வைப்பதும் அவசியம். உங்கள் வீட்டு கிச்சனில் அதிக துர்நாற்றம் வீசினால் அதை சரிசெய்ய முதலில் கிச்சனை சுத்தமாக துடைத்து எடுக்கவும். பின்பு காட்டனில் எசன்ஷியல் ஆயில் எனப்படும் அத்தியாவசிய எண்ணெய்யை நனைத்து மூலைகளில் வைக்கவும். இந்த காட்டனை தினமும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

கிச்சனில் அடிக்கும் நாற்றத்தை விரட்ட டிப்ஸ்

  • கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை நீக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 1-2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலக்கவும். அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கிச்சன் முழுவதும் தெளித்து விடவும்.
  • கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை இயற்கையான முறையிலும் நீக்கலாம். அதற்கு வாசனை மிகுந்த பூக்களை தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டு அதை கிச்சனில் வைக்கவும். அதிலிருந்து வரும் வாசனை கிச்சன் முழுவதும் பரவும். இதற்கு மல்லிகைப்பூ, குண்டு மல்லி, ரோஜா மற்றும் சம்பங்கி பூக்களை பயன்படுத்தலாம்.

kitchen sink smell

  • எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோலை தூக்கி வீசுவதற்கு பதிலாக அவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். அதனுடன் இலவங்கப்பட்டை தூளையும் சேர்த்து அந்த நீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கவும். பின்பு இதை கிச்சன் முழுவதும் தெளித்தால் துர்நாற்றம் நீங்கி நல்ல வாசனை வர தொடங்கும்.
  • சில நேரங்களில் அழுக்கு நிறைந்த கிச்சன் மேடை மற்றும் காய்கறி வெட்டும் பலகையில் இருந்தும் துர்நாற்றம் வீசலாம். இதுப்போன்ற நேரங்களில் எலுமிச்சையில் உப்பை தடவி அதை கிச்சன் முழுவது தேய்க்க வேண்டும். இதனால் கிச்சனில் வரும் துர்நாற்றம் குறையும்.
  • வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து கிச்சன் முழுவதும் தெளிக்க வேண்டும். இதனால் துர்நாற்றம் நீங்கும்.

உங்கள் கிச்சனிலும் துர்நாற்றம் வீசினால் அதை சரிசெய்ய இந்த வழிகளை முயற்சி செய்து பாருங்கள். பலன் கிடைக்கும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com