
இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களில் பல விதமான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும். ஆனால், அதன் நன்மைகள் என்னவென்று சில நேரங்களில் நாம் அறிவதில்லை. குறிப்பாக, நெல்லிக்காய் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதன் மூலம் நமக்கு பல பயன்கள் கிடைக்கின்றன.
மேலும் படிக்க: செரிமானம் முதல் சரும ஆரோக்கியம் வரை; காலையில் சியா விதை நீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
தினமும் காலை நெல்லிக்காய் சாறு அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலின் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்துவதோடு, பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எண்ணற்ற நன்மைகளை தருகின்றன. அந்த வகையில் நெல்லிக்காய் சாறு குடிப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.
நெல்லிக்காய் சாறில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, காய்ச்சல், சளி போன்ற பருவகால நோய் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

காலை வேளையில் நெல்லிக்காய் சாறு குடிப்பது செரிமான சுரப்பிகளை தூண்டி, செரிமானத்தை சீராக்குகிறது. மேலும், இது அசிடிட்டி பிரச்சனைகளை தடுத்து, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்றி, சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இது முகப்பருவை குறைத்து, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கிறது.
மேலும் படிக்க: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தய தண்ணீர்; நோட் பண்ணுங்க மக்களே
நெல்லிக்காய் சாறை தொடர்ந்து அருந்துவதன் மூலம், கூந்தலின் வேர்க்கால்கள் வலுப்பெறுகின்றன. இது பொடுகு தொல்லையை குறைப்பதோடு, இளம் வயதிலேயே முடி நரைப்பதை தடுக்கிறது.
நெல்லிக்காய் சாறு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பை குறைக்க உதவுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை தங்கள் உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லிக்காய் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, இருதய தசைகளை வலுப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
அதன்படி, உங்கள் நாளை ஒரு கிளாஸ் நெல்லிக்காய் சாறுடன் தொடங்குவது, உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com