
தற்போதைய வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, வேலையினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் மரபியல் காரணங்களால் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து விட்டன. முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, முறையான கூந்தல் பராமரிப்பு மற்றும் சரியான உணவு ஆகியவை மிகவும் அவசியமானதாகும்.
மேலும் படிக்க: ஆளி விதை தரும் அதிசய பலன்கள் தெரியுமா? அடர்த்தியான கூந்தலுக்கு இதுதான் ரகசியம்!
குறிப்பாக, எத்தனையோ ஷாம்பூ, சீரம், ஹேர் ஆயில் போன்ற பொருட்களை பயன்படுத்தினாலும் சரியான சத்துகள் கிடைக்கவில்லை என்றால் முடியின் வளர்ச்சி மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். அந்த வகையில் கூந்தலை உறுதியாக வளரச் செய்யும் சத்துகளை இதில் பார்க்கலாம்.
வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுவதுடன், கொலஜன் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஜன் என்பது முடி ஆரோக்கியத்திற்கு தேவையான புரதமாகும். இது முடியின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. எனவே, வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதற்காக மாத்திரைகளை பயன்படுத்தலாம் என்று கருதுபவர்கள் கட்டாயம் மருத்துவரை ஆலோசித்து அவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்துகளை சாப்பிட வேண்டும்.

வைட்டமின் ஈ-ல் அன்டிஆக்சிடென்ட்ஸ் உள்ளது. இது முடி உதிர்வதை குறைக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவும். கோதுமை எண்ணெய், அவகேடோ, பாதாம், சூரியகாந்தி விதைகள், வேர்க்கடலை வெண்ணெய், குடைமிளகாய் மற்றும் சால்மன் மீன் போன்ற உணவுகளில் வைட்டமின் ஈ இயற்கையாகவே காணப்படுகிறது. இவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஈ சத்தை பெற முடியும்.
மேலும் படிக்க: முடி உதிர்வுக்கு சிம்பிள் தீர்வு; வீட்டிலேயே இருக்கும் இந்த 5 எண்ணெய்களை கூந்தலுக்கு பயன்படுத்துங்கள்
வைட்டமின் பி7, பயோட்டின் என்று அழைக்கப்படுகிறது. இது முடியின் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய புரதமான கெரட்டின் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது. முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், முடியின் தரத்தை அதிகரிக்கவும் உதவும் பயோட்டின், முட்டை, கோதுமை, ஓட்ஸ், அரிசி, பால் பொருட்கள் மற்றும் பல வகையான காய்கறிகளில் நிறைந்து காணப்படுகிறது.

வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்தையும், கால்சியம் உறிஞ்சுதல் திறனையும் மேம்படுத்துகிறது என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இருப்பினும், வைட்டமின் டி முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. முடியின் வளர்ச்சி மற்றும் அதன் ஆரோக்கியத்திற்கு தேவையான மரபணுக்களின் செயல்பாட்டை வைட்டமின் டி கட்டுப்படுத்துகிறது. பால், தயிர், ஆரஞ்சு பழச்சாறு, சீஸ், சால்மன் மீன், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் காளான்கள் போன்ற உணவுகளில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது.
ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலை பெற, இந்த வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியம். இவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com