மழைக்காலம் மனதிற்கு இதமானதாக இருந்தாலும், சருமத்திற்கு சில பிரச்சனைகளை தரக்கூடியது. காற்றிலுள்ள ஈரப்பதம், பிசுபிசுப்பு மற்றும் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை பிரச்சனைகளை அதிகரிக்கின்றன.
மேலும் படிக்க: இளமையான தோற்றத்தை அளிக்கும் கொலஜன் நிறைந்த உணவுகள்; சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இவற்றை சாப்பிடவும்
அதனடிப்படையில், மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை எவ்வாறு சீராக பராமரிக்கலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்த சரும பராமரிப்பு முறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் நல்ல மாற்றத்தை காண முடியும்.
மழைக்கால ஈரப்பதத்தில் முகத்தை அடிக்கடி கழுவத் தோன்றும். ஆனால், இது சருமத்திற்கு நல்லதல்ல. அதிகப்படியான சுத்தம், சருமத்திலுள்ள இயற்கையான எண்ணெய்யை நீக்கிவிடும். எனவே, தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு முறை, மென்மையான, நுரையில்லாத க்ளென்சரை பயன்படுத்தி முகத்தை கழுவலாம். இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதனால் முகப்பரு, அழற்சி போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.
மழைக்காலத்தில் சருமம் ஈரப்பதமாக இருப்பது போல தோன்றினாலும், உள்ளடுக்குகள் வறண்டு போக வாய்ப்புள்ளது. இதனால், சருமம் ஈரப்பதமாக இருப்பதாக ஒரு தவறான எண்ணம் ஏற்படும். பின்னர், திடீரென வறண்டு போவது அல்லது எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே, சருமத்தை சுத்தம் செய்த உடனேயே மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். இது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து முகப்பரு மற்றும் பொலிவின்மை தோற்றத்தை தடுக்கும்.
மழைக்காலத்தில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, சருமத்திற்கு அதிகப்படியான பொருட்களை பயன்படுத்துவது. சன்ஸ்கிரீன், பிரைமர், க்ரீம்கள் என பலவற்றை அடுக்குவது சருமத்திற்கு எரிச்சலை உருவாக்கும். இதற்கு பதிலாக, உங்கள் சரும பராமரிப்பு முறையை எளிதாக்குங்கள். பெரும்பாலான நேரம் வீட்டிற்குள் இருந்தால், குறைவான பொருட்களை பயன்படுத்துங்கள். இது முகப்பரு மற்றும் பூஞ்சை தொற்றுக்களை குறைக்கும்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய் மட்டும் போதாது; இந்த 5 பராமரிப்பு முறைகளும் அவசியம்
மழைக்காலத்தில் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவது இயல்பானது. ஈரமான சாக்ஸ், இறுக்கமான ஆடைகள் அல்லது ஈரப்பதமான சூழலில் நீண்ட நேரம் இருப்பது போன்ற காரணங்களால் சரும பிரச்சனைகள் வரலாம். ஈரமாக இருக்கும் ஆடைகளை உடனடியாக மாற்றுவது அவசியம். உங்கள் பாதங்களை, குறிப்பாக விரல்களுக்கு இடையில் உள்ள பகுதிகளை ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் சருமம், உங்களுடைய உடல் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகும். சரும பிரச்சனைகள் சில சமயங்களில், செரிமான கோளாறுகள், கல்லீரல் செயல்பாடு குறைவது அல்லது மன அழுத்தம் ஆகியவற்றை குறிக்கும் சரியான செரிமானம், நல்ல தூக்கம் மற்றும் மன அழுத்தமின்மை போன்றவை உங்கள் சருமத்தின் நிறம், அமைப்பு மற்றும் வலிமையை மேம்படுத்தும்.
ஒவ்வொரு மாதமும் புதிய பொருட்களை வாங்கவோ, புதிய சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றவோ தேவையில்லை. உங்கள் சருமத்தின் தன்மையை உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு சிறிதளவு பராமரிப்பு செய்தாலே போதும். இந்த மழைக்காலத்தை கவனமுடன் கையாண்டால், உங்கள் சருமத்தை எளிதாக பாதுகாக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com