இன்றைய காலகட்டத்து ஆண்கள் பலருக்கும் விந்தணு குறைபாடு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. விந்தணு உற்பத்தி, விந்தணுவின் எண்ணிக்கை, விந்தணுவின் வேகம், விந்தணுவின் ஆரோக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளால் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் நிலை உண்டாகிறது. இப்பிரச்சினைக்கு மருத்துவரை அணுகி மாத்திரைகள் சாப்பிட்டாலும் ஆரோக்கியத்திற்கான உணவு பழக்கத்திற்கு மாற வேண்டும்.
விந்தணு தொடர்பான பிரச்சினைகள் நீங்கிட காலை முதல் இரவு வரை சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
காலை
- தினமும் காலையில் தலா நான்கு எண்ணிக்கையில் ஊறவைத்த பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடவும். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது விந்தணுவின் ஆரோக்கியம் மேம்படும்.
- கால் மணி நேர இடைவெளியில் வெந்தயத் தண்ணீர் அல்லது வெந்தய டீ குடிக்கவும்
- வெந்தயம் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
- மீண்டும் ஒரு பத்து நிமிட இடைவெளியில் மூன்று உலர் அத்திபழம் சாப்பிடவும்.
- அதன் பிறகு முருங்கை பிசினை தண்ணீரில் கலந்து குடிக்கவும். கடைகளில் முருங்கை பிசின் படவுராக கிடைக்கும். முருங்கை பிசின் ஆண் உறுப்பின் விறைப்புத் தன்மையை அதிகரிக்கும்.
- இதன் பின்னர் அஸ்வகந்தா எனும் அமுக்கிரா பொடியை சூடுபடுத்திய பாலில் கலந்து குடிக்கவும் அல்லது ஓரிதழ் தாமரை பவுடரை பாலில் கலந்து குடிக்கவும்.
- அதாவது காலையில் பாலில் அஸ்வகந்தா பாலை குடித்தால் இரவில் ஓரிதழ் தாமரை பாலை குடிக்கவும். இவை விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
- தண்ணீர் விட்டான் கிழங்கு ஆண் உறுப்பின் விறைப்பு தன்மையை அதிகரிக்கும்.
- ஆளி, பூசணி, சூரிய காந்தி விதைகளில் ஏதாவது ஒன்றை தண்ணீரில் ஊறவைத்து குடிக்கவும்.
- காலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் இவற்றை சாப்பிட்டு விடுங்கள்.
- காலை எட்டு மணி அளவில் எண்ணெய் அதிகம் சேர்க்காத உணவுகளைச் சாப்பிடலாம். இட்லி அல்லது தோசை சாப்பிடும் முன்பாக ஒரு ஆப்பிள் அல்லது கொய்யா சாப்பிடவும்.
- மூன்று இட்லிக்கு சாப்பிட வேண்டாம். ஏனென்றால் 15 நிமிடங்கள் கழித்து வேகவைத்த சுண்டல் வகைகளை சாப்பிட வேண்டும்
- 11 மணி முதல் 11.30 மணி அளவில் ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, செவ்வாழை, பப்பாளி அல்லது நட்ஸ் சாப்பிடவும். ஜூஸாக குடிக்க விரும்பினால் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கவும்.
மதிய உணவு
- வாரத்திற்கு ஒரு முறை மீன் சாப்பிடவும். மீனை எண்ணெய்யில் பொரித்து சாப்பிடாமல் குழம்பு வைத்து சாப்பிடவும்.
- வாரத்திற்கு இரண்டு நாள் சிக்கன் சாப்பிடுங்கள். சிக்கனில் அதிக புரதம் உள்ளது.
- மதிய உணவில் தினமும் ஒரு முட்டை இடம்பெற வேண்டும். நீங்கள் சைவம் சாப்பிடும் நபராக இருந்தால் 100 கிராம் கேரட் சாப்பிடவும். எண்ணெய்யில் தாளிக்காமல் கேரட்டை வேகவைத்து சாப்பிட்டால் போதுமானது.
- இரும்புச்சத்து கிடைக்க தினமும் ஒரு கீரை சாப்பிடுங்கள். ஆரோக்கியமில்லாத விந்தணுக்களை நீக்கி புதிய விந்தணுக்கள் உருவாகிட பூண்டு சாப்பிடவும். மதிய உணவில் பூண்டு குழம்பு இடம்பெறுவதை உறுதி செய்யுங்கள்.
- மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் இஞ்சி டீ குடிக்கவும். இஞ்சி டீ ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்தியை உறுதிப்படுத்தும்.
இரவு உணவு
- இரவு 8 மணி அளவில் எண்ணெய் அதிகம் உல்லாத உணவு சாப்பிடவும். கோதுமை அல்லது ராகி சப்பாத்தி சாப்பிடலாம். உடல் உழைப்பு இன்றி கணினியை மட்டுமே பார்த்து வேலை செய்யும் நபர்கள் தினமும் பசும் பால் குடிக்கவும்.
- உடல் சூடாக இருந்தால் விந்தணுக்கள் உற்பத்தி தடைபட்டு, ஆரோக்கியம் குறைந்த விந்தணுக்கள் இறந்துவிடும். அதேபோல விந்தணுவின் வேகமும் குறைந்துவிடும்.
- தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடித்து எண்ணெய் தேய்த்து குளிப்பது விந்தணுவின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
செய்யக் கூடாதவை
- புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகிய பழக்கங்கள் உடலில் விந்தணுக்களை கொலை செய்துவிடும். அதேநேரம் மேற்கண்ட உணவுகள் கொடுக்கும் பலனையும் கெடுத்துவிடும்.
- இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால் சுய இன்பம் பழக்கத்தில் ஈடுபடாதீர்கள். எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பே இல்லை.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation