Menopause foods: மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க என்ன உணவுகளை சாப்பிடலாம், எதை தவிர்க்க வேண்டும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

menopause diet foods
menopause diet foods

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலி ஏற்படுவது வழக்கம். மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு மனநிலை மாற்றங்களும், மன சுழற்சிகளும் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்களுக்கு முன்பு ஏற்படும் மனநிலை மாற்றம் (பிஎம்ஸ்) என்று கூறப்படுகிறது. இது ஒரு வித மனநிலை சுழற்சி என்று கூறலாம்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில், ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வகையான சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பெண்கள் பெரும்பாலும் தங்கள் தினசரி உணவுமுறையில் போதுமான இரும்பு மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வதில்லை. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை தவிர்க்க இந்த ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:

முதலில் வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு போதுமான கால்சியம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மாதவிடாய் காலத்தில் பால், பன்னீர், தயிர் போன்ற பால் சார்ந்த பொருட்களை மாதவிடாயின் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம். ப்ரோக்கோலி மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகள், மீன்களிலிருந்தும் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம். ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் 1,200 மில்லிகிராம் கால்சியம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. உடலை வலிமையாக்க இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வரலாம். இறைச்சி, மீன், முட்டை, பச்சைக் காய்கறிகள், நட்ஸ் வகைகள் போன்ற உணவுகளில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

foods to eat

முழு தானிய ரொட்டி, பாஸ்தா, அரிசி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பெண்கள் தினமும் 21 கிராம் நார்ச்சத்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மாதவிடாய் நாட்களின் போது பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். மாதவிடாய் வலியை தவிர்த்து ஆரோக்கியமாக இருக்க குறைந்தது 1 1/2 கப் பழங்கள் மற்றும் 2 கப் காய்கறிகள் சாப்பிட வேண்டும்.

அதே போல பெண்கள் மாதவிடாய் வலியைக் குறைக்க ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சூடான இஞ்சி டீயை குடிக்கலாம். இது பெண்களின் வலி மிகுந்த வயிற்றுத் தசைப்பிடிப்புகளைக் குறைக்க உதவுகிறது. அதேபோல பெண்கள் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க இஞ்சி பெரிதும் உதவுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், பால், ஐஸ்கிரீம் மற்றும் சீஸ் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை பெண்கள் மாதவிடாய் நாட்களில் குறைவாக சாப்பிட வேண்டும். அதே போல உங்கள் உணவில் அதிக சர்க்கரை அல்லது உப்பு இல்லாமல் இருப்பது மிக முக்கியம். அதிக உப்பு சாப்பிடுவது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் பழக்கத்தை மாதவிடாய் நாட்களில் தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள், காஃபின், குளிர் பானங்கள் போன்ற சில உணவுகளையும் தவிர்க்க உதவுகிறது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க கூடாது. குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் சிலர் சப்ளிமென்ட்ஸ் எடுப்பது உண்டு. இவர்கள் இந்த மாதவிடாய் நாட்களில் அதிக கடினமான உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் சற்று ஒய்வு எடுப்பது நல்லது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP