
இன்றைய காலத்தில், திருமண உறவுகள் மிகவும் சிக்கலானவையாக மாறிவிட்டன. உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்களும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தால், அதை மகிழ்ச்சியானதாக மாற்ற சில வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று இதில் காண்போம்.
வெற்றிகரமான எந்தவொரு உறவுக்கும் தொடர்பு தான் திறவுகோல் என்று சொல்வார்கள். வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடல், ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. மேலும், ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும். இதனால் அவர்களின் பிணைப்பு மேலும் வலுவடைகிறது.

மேலும் படிக்க: பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த 7 எளிய வழிமுறைகள்
உங்கள் துணையின் மீது கொண்ட அன்பு, அக்கறை மற்றும் நன்றியை அடிக்கடி வெளிப்படுத்துங்கள். சிறிய உதவிகளுக்கும், செயல்களுக்கும் கூட, "நன்றி" அல்லது "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று சொல்வது, உங்கள் துணையை மிகவும் மதிக்கப்பட்டவராகவும், நேசிக்கப்பட்டவராகவும் உணர வைக்கும்.
மேலும் படிக்க: புரதம் முதல் கீரைகள் வரை: குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவுகளின் பட்டியல் - பெற்றோர்களே நோட் பண்ணுங்க
ஒவ்வொரு உறவும் ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த சவால்களை நீங்கள் இருவரும் ஒரு ஜோடியாக சேர்ந்து எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பது தான். இது தான் சில திருமணங்களை சிறப்பாக மாற்றுகிறது. எனவே, உங்கள் துணையிடம் பொறுமையாக இருப்பது திருமண வாழ்க்கையில் மிக முக்கியமான நல்லொழுக்கமாகும்.
உங்கள் துணையின் கனவுகள் மற்றும் லட்சியங்களை ஊக்குவித்து, அதற்கு ஆதரவு கொடுங்கள். இருவருமே தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியில் ஊக்கம் மற்றும் மரியாதை உணர்வுடன் இருக்கும் போது, ஒரு மகிழ்ச்சியான திருமணம் மேலும் செழித்து வளர்கிறது.

நம்பிக்கை என்பது மகிழ்ச்சியான திருமணத்தின் அடிப்படையாகும். எப்பொழுதும் நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் இருங்கள். அப்போது தான் உங்கள் துணை, உறவில் அதிக பாதுகாப்பையும், நம்பிக்கையையும் உணருவார்கள்.
தடுமாற்றங்கள் ஏதுமில்லாமல், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குங்கள். இது ஒரு ஜோடியாக நீங்கள் பிணைக்கப்படவும், உங்கள் உணர்ச்சிப்பூர்வமான அன்பை ஆழப்படுத்தவும் உதவும். வார இறுதி நாட்களிலோ அல்லது உங்களுக்கு கிடைக்கும் நேரத்திலோ இதை வழக்கமாக கடைபிடிக்கலாம்.
இவை அனைத்தையும் சரியாக பின்பற்றுவதன் மூலம் உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், அன்பு நிறைந்ததாகவும் அமைத்துக் கொள்ள முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com