தைப்பூசம் என்பது தமிழ் கடவுள் முருகனை சிறப்பு வழிபாடு செய்யும் ஒரு நன்னாள். தை மாதத்தில் வரும் பவுர்ணமியில் பூச நட்சத்திரமும் சேரும் போது, அது ஆறுமுகனுக்கு உகந்த நன்னாளாக மாறுகிறது. இந்நாளில் அனைத்து முருகன் மற்றும் சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு காவடி, பால்குடம் என்று நடந்தாலும் நாம் வீட்டில் சிறப்பாக வழிபட சில வழிமுறைகள் இருக்கின்றன. முருகனுக்கு உகந்த படையல், அது போல் முருகனுக்கு உகந்த கோலங்கள் என்று தைப்பூசத்தை கொண்டாடலாம். தை பூசம் அன்று எந்த வகையான கோலங்கள் போடலாம் என்று இங்கு காணலாம்.
இதுவும் உதவலாம்:ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வத்தக் குழம்பு
வேல் கோலம்
வீட்டின் பூஜை அறையில் இந்த கோலத்தை போடலாம். அழகான ஒரு வேல் வரைந்து அதை சுற்றிலும் தாமரை மலர்கள் வரைந்து அலங்கரிக்கலாம் அல்லது நடுவில் ஒரு தாமரை வரைந்து அதை சுற்றிலும் ஆறு வேல்களை வரையலாம். ஏனென்றால் ஆறு குழந்தைகளை உருவாக்கிய போது, சிவபெருமான் அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு தாமரை மலர்கள் மீது படைத்தார்.
நட்சத்திர கோலம்
ஆறு முகம் கொண்ட முருகனுக்கு ஆறு பக்கமும் முக்கோணம் கொண்ட ஒரு நட்சத்திர கோலம் தான் மிகவும் ஏற்ற கோலம். ஒரு அறுங்கோணம் நடுவில் வரைந்து அதை சுற்றி ஆறு பக்கமும் கூம்பு வரும்படி அமைக்கும் நட்சத்திர கோலம் தைப்பூசத்திற்கு ஏற்ற சிறப்பான கோலம். இந்த கோலத்தில் ஒவ்வொரு முக்கோணத்திலும் சரவணபவ என்று ஒவ்வொரு அக்ஷரத்தை எழுத வேண்டும். சரவணபவ எனும் மந்திரம் கொண்ட இந்த கோலம் சரவணனின் மனதை கவரும் கோலமாக இருக்கும்.
ஆறு நட்சத்திர கோலம்
மேற்கூறியது ஒரு நட்சத்திர கோலம் என்றால், இது ஆறு நட்சத்திர கோலம். நடுவில் ஒரு நட்சத்திரம் வரைந்து, சுற்றி ஆறு பக்கத்திலும் ஆறு நட்சத்திரங்கள் வரையலாம். சுற்றியுள்ள ஒவ்வொரு நட்சத்திரத்தின் நடுவிலும் அதே போல சரவணபவ என்று எழுதி நடுவில் உள்ள நட்சத்திரத்தில் ஓம் என்று எழுதலாம்.
தேர் கோலம்
வாசலில் அல்லது பூஜை அறையில் அழகிய தேர் கோலம் போடலாம் ,தேர் கோலத்தின் நடுவில் ஓம் என்று எழுதுங்கள். இந்த கோலம் உங்கள் வாசலை வண்ணமயமாக்கி முருக பெருமானை வீட்டுக்குள் வரவேற்கும்.
இதுவும் உதவலாம்:மொறு மொறு சுவையில் அசத்தலான மசால் வடை
வாசலில் போட தாமரை கோலம்
இந்த கோலத்தை பெரிய வாசல் இருப்பவர்கள் போடலாம். நடுவில் அறுங்கோணம் வரையவும். ஒவ்வொரு கோணத்திலும் ஒரு தாமரை மலரை வரையலாம். நடுவே ஓம் எனும் மந்திரத்தை எழுதலாம். ஒவ்வொரு தாமரைக்கும் ஒவ்வொரு நிறம் கொடுத்தால் கண்களை கவரும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation