
பார்ப்பதற்கு எப்போதுமே இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புவோம். ஆனால், இதனை எவ்வாறு சாத்தியப்படுத்த முடியும் என்று பலருக்கு தெரியாது.
ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து பல்வேறு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், சில எளிய பழக்கங்களை நாள்தோறும் கடைபிடிப்பதன் மூலம் சருமத்தை சீராக பராமரிக்கலாம். அவற்றை தற்போது பார்க்கலாம்.
இளமையான சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் முதல் படி, உடலுக்கு தேவையான நீரேற்றத்தை (Hydration) வழங்குவது தான். காலையில் எழுந்தவுடன் ஒரு சிட்டிகை எலுமிச்சை சாறு கலந்த சுடுதண்ணீர் குடிப்பது இதற்கு பலன் அளிக்கும். இந்த வழக்கம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் ஒரு அன்டிஆக்ஸிடன்ட் ஆகும்.

மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்தை பெற பீட்ரூட் ஐஸ் கட்டிகளை இப்படி பயன்படுத்தவும்
சரும பராமரிப்பு மட்டுமே இளமையான தோற்றத்தை அளிக்காது. உங்கள் கூந்தலையும் முறையாக பராமரிக்க வேண்டும். கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதன் மூலம் முடி நரைப்பதை தடுப்பதுடன், உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் சீராக பராமரிக்க முடியும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் என உங்களுக்கு ஏற்றதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: பெண்களிடையே அதிகரிக்கும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள்; முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உங்களை இளமையாக காட்சிப்படுத்துவதில் உடற்பயிற்சிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுவதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இந்த நன்மைகள் அனைத்தும் வயதாகும் செயல்முறையை தாமதப்படுத்த உதவுகின்றன.

தூக்கம் என்பது இன்றியமையாதது. உறக்கத்தின் நேரம் குறையும் போது அது பல்வேறு வகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, தவறாமல் தினமும் 7 முதல் 8 மணி நேரம் உறங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
இவை அனைத்தையும் பின்பற்றினால் எப்போதும் பார்ப்பதற்கு இளமையான தோற்றத்துடன் இருக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com