Weight Gain Foods : ஒல்லியாக இருக்கும் குழந்தைகளை புஷ்டியாக்க இந்த உணவுகளை கொடுங்க!

குழந்தையின் வளர்ச்சி, உடல்எடை குறைவாக இருக்கிறதே என்று கவலைப்படலாம் உணவுமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் குழந்தை புஷ்டியாகி விடும்.

high calories food to increase weight of toddler

குழந்தை பிறந்து மூன்று வயதிற்கு மேல் ஆன பிறகும் சரியான வளர்ச்சி இல்லை, உடல்எடை அதிகரிக்கவில்லை என்ற கவலை பெற்றோருக்கு இருக்கும். இதற்காக மருத்துவர்களை அணுகி குழந்தைகளுக்கு சத்து டானிக் கொடுக்கலாமா என நீங்கள் கேட்டாலும் சத்து டானிக்கால் குழந்தையின் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்பு குறைவே. குழந்தையின் எடையை அதிகரிக்க உணவுமுறையை தவிர வேறு விஷயங்களை செய்வது பலன் தராது. உணவுமுறையை மாற்றினால் மட்டுமே குழந்தையின் எடையை அதிகரிக்க முடியும்.

எனவே குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கவும், வளர்ச்சி சரியான அளவிலும் இருக்க எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையை அதிகமாக சாப்பிட வைத்தால் அதன் எடையை அதிகரிக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் பல சமயங்களில் இது சாத்தியம் அல்ல.

குழந்தையின் எடையை அதிகரிக்க அவர்கள் சாப்பிடும் உணவில் கலோரிகளை அதிகரிக்க வேண்டும். குழந்தை துருதுருவெனவும், சுறுசுறுப்பாகவும் ஓடிக் கொண்டே இருப்பதால் தான் எடை அதிகரிக்கவில்லை என நினைப்பது முற்றிலும் தவறான புரிதலாகும். உதாரணமாக 30 வயதில் உள்ள 60 கிலோ எடை கொண்ட பெண்மணிக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 800 கலோரிகள் தேவைப்படும். ஆனால் ஐந்து வயது குழந்தைக்கு 1500 முதல் 1600 கலோரிகள் தேவைப்படும். அதாவது 30 வயதில் தாயாக இருக்கும் பெண் உட்கொள்ளும் உணவில் 80 விழுக்காடு அளவிற்கு குழந்தையும் சாப்பிடும். பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு உயரமாக வளருவது கிடையாது.

healthy foods for toddlers

ஆனால் குழந்தைக்கு எலும்பு, உறுப்பு, சதை என அனைத்தும் வளர்கிறது. எனவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் போசாக்கு வளர்ச்சிக்கும் சேர்த்து தான் கொடுக்கிறோம். ஆனால் குழந்தைக்கு ஒரே நாளில் ஆயிரம் 600 கலோரிகள் கொடுப்பது கடினம். அதற்கு சில சூட்சமங்கள் தெரிந்திருப்பது அவசியம்.

குழந்தை ஒரு இட்லியுடன் சட்னி சாம்பார் சாப்பிட்டால் 150 கலோரி வரை கிடைக்கும், ஒரு கப் சாதத்தில் 150 கலோரிகளும், ஒரு சப்பாத்தியில் 100 கலோரிகளும் கிடைக்கும். இவை அனைத்தையும் எண்ணிக்கையில் அதிகரித்தால் கூட ஒரு குழந்தைக்கு 700 முதல் 800 கலோரிகள் மட்டுமே கிடைக்கும். அதனால் தான் குழந்தைகள் வளர்ச்சியின்றி இருக்கின்றன.

மேலும் படிங்கஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

ஆனால் ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 கலோரிகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் எடையை அதிகரித்திடும் வழி என்றால் அது கலோரி அதிகம் உள்ள உணவுகளைக் கொடுப்பதாகும்.

குறைந்த அளவில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை கொடுக்க வேண்டும். ஒரு மைசூரு பாக்கில் 250 கலோரிகளும், பெரிய லட்டுவில் 500 கலோரிகளும் இருக்கின்றன. தினமும் இவற்றை குழந்தைக்கு கொடுக்க முடியாது. அதற்கு வேறு சில வழிகள் உள்ளன.

சாப்பிடும் குழந்தையின் உணவில் சர்க்கரை, நெய், நட்ஸ் போன்றவற்றை அதிகரிக்கலாம். பழங்கள் எடையை அதிகரிக்கும் பண்புகள் உள்ளவை. பழத்தை கொடுத்து குழந்தையின் எடையை அதிகரிக்க இயலாது. மாவுச் சத்து உணவுகள் கலோரிகளை அதிகப்படுத்தும். ஒல்லியாகவும் எடை குறைவாகவும் உள்ள குழந்தைகளுக்கும் இது உதவும்.

இட்லியுடன் கொடுக்கும் சாம்பாரில் மூன்று ஸ்பூன் நெய் சேர்க்கலாம். மூன்று ஸ்பூன் 150 கலோரிகளை அதிகப்படுத்தும். வேர்க்கடலை சட்னியும் சேர்த்து கொடுத்தால் குழந்தையின் எடை கட்டாயம் அதிகரிக்கும். இதில் மொத்தம் 300 கலோரிகள் அடங்கி இருக்கின்றன. நிலக்கடலை உருண்டை, ராகி உருண்டையை காலையிலும் மாலையிகும் இரண்டு கொடுக்கலாம். இதில் 400 கலோரிகள் கிடைத்துவிடும்.

மேலும் படிங்கஒன்பது மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

ஒரு கப் பருப்பு பாயாசத்தில் சர்க்கரை, நட்ஸ், கிஸ் மிஸ் ஆகியவற்றை சேர்த்து கொடுப்பதால் 200 கலோரிகள் கிடைக்கும். தோசையிலும் நெய் சேர்க்கலாம். தினமும் இரண்டு முட்டையை எண்ணெய்யில் வறுத்து கொடுக்கலாம். அதேநேரம் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகப்படுத்தலாம். ஒரே வேளையில் கொடுக்காமல் பிரித்தும் கொடுக்கலாம். வெறும் பால் கொடுக்காமல் அதில் பேரீச்சை சேர்த்து மிக்ஸியில் போட்டு குடிக்க வைக்கலாம். குழந்தைகள் உண்ணும் உணவிலேயே போசாக்கை அதிகரிப்பது தான் எடையை அதிகரிப்பதற்கான வழியாகும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP