Baby Feeding Chart : ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

குழந்தைக்கு ஒரு வயது ஆனவுடன் வீட்டில் அனைவரும் சாப்பிடும் உணவுகளையே குழந்தைக்கும் கொடுங்கள். பிரத்யேகமாக உணவுகளை தயாரிக்க வேண்டாம்.

feeding schedule for a one year old

குழந்தை பிறந்து ஒரு வயது நிறைவடைந்தவுடன் பெரும்பாலான தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகின்றனர். ஒன்பது மாதங்கள் முதலே குழந்தை தனது ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை பயன்படுத்தி சாப்பிட ஆரம்பிக்கும் போது முடிந்தவரை ஊட்டும் பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு வயது தொடங்கும் போது குழந்தை தனது கைகளை மட்டுமே பயன்படுத்தி சாப்பிடும் பழக்கத்திற்கு மாற்ற முடியும்.

இதுவரை குழந்தைக்கென தனியாக மிக்ஸியில் போட்டு உணவை அரைத்து கொடுத்து வந்ததை நிறுத்திவிட்டு வீட்டில் உள்ளவர்களுக்காக சமைக்கும் உணவை குழந்தைக்கு நன்கு மசித்து கொடுக்க வேண்டும். ஒரு வயதிற்கு முன்னாள் குழந்தைக்கு பெரியளவில் காரம், உப்பு சேர்க்காமல் உணவுகளை கொடுத்து வந்திருப்போம். ஆனால் இனி அப்படி செய்யக்கூடாது.

குழந்தையை FAMILY POT FEEDING முறைக்குள் கொண்டு வர வேண்டும். அதாவது வீட்டில் உள்ளவர்களுக்கு மொத்தமாக ஒரு பானையில் சமைக்கிறோம் என்றால் அதில் ஒரு பகுதியை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஒரு வயதிற்கு மேல் குழந்தைகள் தானாக சாப்பிடுவதை ஊக்கப்படுத்துவது அவசியம். முழுக்க முழுக்க வீட்டு உணவுகளை கொடுக்க வேண்டும். பிரத்யேகமாக எந்த உணவையும் குழந்தைக்காக தயாரிக்க தேவையில்லை.

one year old baby food chart

வழக்கமாக காலையில் இட்லியில் ஆரம்பித்து மதியத்தில் சாப்பாடு, பருப்பு குழம்பு மற்றும் இரவுக்கு தோசை, சப்பாத்தி என குடும்ப உறவினர்கள் எதை சாப்பிடுகிறார்களோ அதையே குழந்தைக்கும் கொடுங்கள். ஒரு வயதிக்கு மேல் குழந்தைக்கு ஜீரணிக்காத உணவுகளே கிடையாது. குழந்தைகளுக்கு பல் இல்லை என்றாலும் அவர்களால் நன்று மென்னு சாப்பிடலாம்.

மேலும் படிங்கஒன்பது மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

இரண்டு வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். எனவே ஒரு வயதில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டாம். ஒரு வயதிற்கு மேலாக 40 விழுக்காடு ஆற்றல் குழந்தைக்கு தாய்ப்பால் மூலம் கிடைக்கின்றது. வேலைக்கு செல்லும் தாய்மாராக இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கவும்.

ஒரு வயதுக்கு மேல் குழந்தைக்கு ஐந்து வேளை திட உணவு தேவை. மூன்று வேளை உணவும், இரண்டு வேளைக்கு கூழ், பழங்கள் கொடுக்கலாம். தொண்டையில் சிக்காத உணவுகளை தாராளமாக கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்கள் 100 மில்லி லிட்டர் பசும் பால் கொடுக்கலாம்.

சுவை அரும்புக்கு அதிக இனிப்புகள், சிப்ஸ் போன்றவற்றை கொடுத்தால் வீட்டு உணவுகளை குழந்தைகள் தவிர்க்க கூடும். குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பி உணவு கொடுக்காதீர்கள். செல்போனில் பாடல்கள், ரைம்ஸ் போட்டு குழந்தைகளை சாப்பிட வைக்க வேண்டாம்.

மேலும் படிங்கமகளிர் கவனத்திற்கு! சீக்கிரம் கர்ப்பம் தரிப்பதற்கான வழிகள்...

அதேபோல முடிந்தவரை குழந்தையை அனைவரும் சாப்பிடும் போது பக்கத்தில் உட்கார வையுங்கள். குழந்தையை தனியாக சாப்பிட வைத்தால் நமக்கு சாதாரண உணவுகளை கொடுத்து விட்டு பிறர் கலர் கலரான உணவுகளை சாப்பிடுகிறார்கள் என நினைக்க கூடும். குழந்தை உங்களது தட்டில் இருந்து உணவுகளை எடுத்துச் சாப்பிட்டால் அது அரோக்கியமான விஷயம் தான்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP