வேலைக்குச் செல்லும் பெண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க பருக வேண்டிய பானங்கள்!

பணிக்குச் செல்லும் பெண்கள் தங்களது உடல் நலத்தில் அக்கறை காட்டுவதில்லை. நாள் முழுவதும் தனது வேலைகளை எவ்வித அலுப்பில்லாமல் பார்க்க வேண்டும் என்றால் காலையில் சில பானங்களைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.
image
image

இன்றைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெரும்பாலான பெண்கள் ஏதாவது பணிக்குச் செல்கிறார்கள். அலுவலக பணி முதல் கட்டுமான வேலைக்குச் செல்வது, காட்டு வேலைகளுக்குச் செல்வது என தங்களால் முடிந்த பணிகளைச் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். இப்படி குடும்பத்தை வழிநடத்துவதில் அக்கறைக் காட்டும் பெண்கள் ஒருபோதும் அவர்களின் உடல் நலத்தைக் கண்டு கொள்வதில்லை. இதற்காக வெளியில் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. உங்களது சமையல் அறையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு பெண்கள் தங்களைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க முடியும். இதோ அவற்றில் சில இங்கே.

வரகொத்தமல்லி தண்ணீர்:

நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவுகள் நச்சுகளாக அப்படியே உடலில் படிந்திருக்கும். செரிமான அமைப்பு சீராக செயல்படவில்லையென்றால் சோர்வான உணர்வைப் பெற நேரிடும். இவற்றைத் தவிர்க்க வரகொத்தமல்லி தண்ணீரைப் பருகுவது நல்லது. ஒரு டம்ளரில் 1 தேக்கரண்டி அளவு வர கொத்தமல்லிகளை எடுத்து தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் பருகும் போது உடலில் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

வெந்தய தண்ணீர்:

சிறிய பவுல் அல்லது டம்ளரில் 1 தேக்கரண்டி அளவு வெந்தயத்தை எடுத்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலை எழுந்தவுடன் இதை வடிகட்டு தண்ணீரைக் குடிக்கவும். தண்ணீரை மட்டுமல்ல வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் சீராக்குகிறது. வயிற்று வலி, வயிற்றுப்புண் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறது.

சியா விதை தண்ணீர்:

நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட சியா விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இவ்வாறு செய்யும் போது மலச்சிக்கல் பிரச்சனை சீராவதோடு செரிமான அமைப்புகளும் சீராக செயல்பட உதவுகிறது. இவற்றை இரவு முழுவதும் ஊற வைக்க முடியவில்லையென்றால் காலையில் அரை மணி நேரத்திற்கு மட்டும் ஊற வைத்து இந்த தண்ணீரைப் பருகலாம்.

மேலும் படிக்க:இல்லத்தரசிகளே.,தினமும் 15 நிமிடம் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே இந்த பயிற்சிகளை செய்யுங்கள்


இதோடு மட்டுமின்றி இலவங்கப்பட்டை ஊற வைத்த தண்ணீர், கருப்பு திராட்சை ஊற வைத்த தண்ணீர், சீரகம் ஊற வைத்த தண்ணீர் போன்றவற்றைத் தினமும் பருகலாம். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிப்பது நல்லது. ஒருவேளை உங்களுக்கு குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் இந்த பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்சுலின் அல்லது தைராய்டு பிரச்சனைக்கு மருந்து உட்கொள்பவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மேற்கூறிய பானங்களைப் பருகக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP