குழந்தைகள் வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாக அமையும். ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தைகயாக இருந்தாலும் அவர்களைப் பொறுப்புடன் வளர்க்க வேண்டும். ஆண் குழந்தைகளை ஒரு மாதிரியாகவும், பெண் குழந்தைகளை ஒரு மாதிரியாகவும் வளர்க்கக்கூடாது. இது குழந்தைகளிடம் பிரிவினையை ஏற்படுத்துவதோடு பாசத்தையும் குறைப்பதற்கு வழியாக அமையும். எனவே இது போன்ற சூழலிலிருந்து தப்பிக்க பெண் குழந்தைகளை எப்படி பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம வாருங்கள்.
மேலும் படிக்க: இந்த 7 விஷயங்கள் உங்கள் திருமண வாழ்க்கையை மோசமாக்கும்-சரியான நேரத்தில் கவனமாக இருங்கள்!
பெண் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆண் மற்றும் பெண் எந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஊக்கம் அளிக்க வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு நம்பிக்கையும், துணிச்சலையும் வளர்க்க சில வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதோ அவற்றில் சில உங்களுக்காக..
பெண் குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் சந்தோஷத்தைத் தரக்கூடிய பொக்கிஷம். அவர்கள் என்ன செய்தாலும், அவர்களின் வேலையில் பெருமைக் கொள்ளவும். வெளி உலகில் எப்படி பழக வேண்டும்? மற்றவர்களிடம் மரியாதையாக எப்படி பேச வேண்டும்? நடந்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து அவர்களுக்குத் தெரியும் படி நடக்கவும். சின்ன சின்ன விஷயங்களில் முன் மாதரியாக இருந்தாலே போதும், குழந்தைகள் வளர வளர நல்ல பண்புகளைம் அவர்கள் அறிந்துக் கொள்வதற்கு ஒரு வழியாக அமையும்.
வாழ்க்கையில் பெண் குழந்தைகளுக்கு எந்த சூழல் வந்தாலும் அதை எப்படி? உறுதியுடன் எதிர்க்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்குப் பழகிக் கொடுக்கவும். குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடக்கும் எந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் தைரியாக கலந்துக் கொள்ள சொல்லவும். இந்த பழக்கம் எதிர்காலத்தில் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு உறுதியாக இருக்கும்.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாராட்டுகள் அனைவருக்கும் சமமாக ஒன்று. குறிப்பாக பெண் குழந்தைகளை அவர்களின் தோற்றம் மற்றும் ஆடை அணிகலன்கள் நன்றாக இருக்கு என்று மட்டும் பாராட்டாமல், அவர்களை செய்யக்கூடிய சிறிய விஷயங்களையும் பாராட்ட முயற்சி செய்யுங்கள். பொது இடங்களில் தைரியமாகவும், துணிச்சலாக செய்யக்கூடிய விஷயங்களை குடும்பத்தினர் முன்னதாக முன் உதாரணமாக எடுத்துச் சொல்லுங்கள். அவர்களை மற்றவர்கள் முன்னால் பாராட்டுங்கள். இத்தகைய செயல்கள் அவர்களை பெருமிதம் அடைய செய்யும்.
மேலும் படிக்க: அதே பவுலிங் ஆக்ஷன்! பும்ராவின் ஜெராக்ஸ் போல பந்துவீசும் பள்ளிச்சிறுமி
வாழ்க்கையில் புதிய சவால்களை தைரியமாக எதிர்க் கொள்ள பெண் குழந்தைகளுக்கு உதவியாக இருங்கள். நீ பெண் தானே வேண்டாம் என்ற வார்த்தையை மட்டும் அவர்கள் முன்னால் கூறாமல் உன்னால் நிச்சயம் முடியும். நீ எதிலும் வெற்றி பெறுவாய் என்று தைரியம் கூறுங்கள். இந்த கணிவான வார்த்தைகள் அவர்களின் செயல்திறனை ஊக்குவிக்க உதவியாக இருக்கும்.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com