herzindagi
good qualities of mother

உங்களது குழந்தைகளுக்கு சிறந்த அம்மாவாக மாற வேண்டுமா? இதை பாலோ பண்ணுங்க!

<p style="text-align: justify;">குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்ப்பதில் அப்பாக்களை விட அம்மாக்களுக்குப் பெரும் கடமைகள் உள்ளது. <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2024-04-30, 19:19 IST

குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்ப்பதற்கு சிரமப்படும் பெற்றோர்களாக நீங்கள்? அதிலும் அப்பாக்களை விட குழந்தைகளை சிறு வயதில் இருந்து அரவணைத்து பாசத்துடன் வளர்க்கும் பொறுப்பு அம்மாக்களுக்கு அதிகம். இப்படிப்பட்ட சூழலில் நீங்களும் ஒருவராக இருந்தால் எப்படி உங்களது குழந்தைகளுக்கு சிறந்த அம்மாவாக மாற என்ன செய்ய வேண்டும்? என்பது இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.  

mom issues

மேலும் படிக்க: மே மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் தனித்துவமான 10 ஆளுமைப் பண்புகள்!

குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்க்க வேண்டுமா?  

  • குழந்தைகளைப் பாசத்துடனும் வளர்ப்பதில் எந்தளவிற்கு அக்கறைக் காட்டுகிறீர்களோ? அந்த அளவிற்கு அவர்களின் நற்பண்புகளை வளர்ப்பதிலும் அக்கறையுடன் இருக்க வேண்டும். குறும்பு செய்யாத குழந்தைகள் கிடையாது. இந்த சூழலில் ஏன் இதை செய்யக் கூடாது? எதற்காக செய்யக்கூடாது? என பொறுமையாக குழந்தைகளுக்குச் சொல்ல முயற்சி செய்யவும்.
  • குழந்தைகளின் விருப்பம் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. மாறாக அவர்களுக்கு ஏதாவது திறமை உள்ளது என்பதை அம்மாக்கள் தான் முதலில் கண்டறிவார்கள். எனவே அவர்கள் எதில் சிறந்து விளங்குகிறார்கள்? என்பதைக் கண்டறிந்து அதற்கான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழுங்கள். இதோடு அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும் முயற்சிக்கவும்.
  • அப்பாக்களை விட அம்மாக்களிடம் தான் குழந்தைகள் அனைத்து விஷயங்கள் அனைத்தையும் சீக்கிரம் சொல்லுவார்கள். எனவே அம்மாக்கள் எப்போதும் குழந்தைகளிடம் நண்பர்கள் போன்று பழக வேண்டும்.
  • அனைத்துக் குடும்பங்களிலும் கஷ்டங்கள் வரத் தான் செய்யும். அதற்காக குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுக்காமல் இருந்து விடாதீர்கள். அதிலும் அம்மாக்கள் ஒவ்வொரு முறையும் கேட்கும் பொருட்களை வாங்கித் தர முடியாது என்று சொல்லும் போது பாசம் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
  • குழந்தைகளிடம் எப்போதும் அன்பாக பேசுங்கள். பிடித்த விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யவும். 
  • குழந்தைகள் என்றாலே அனைவரிடத்தும் பாசம் அதிகம் வைக்கும். இந்த சூழலில் ஏன் மற்றவர்களுடன் பேசுகிறாய் என சொல்லுவதை அம்மாக்கள் முதலில் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ஏன் அம்மா? இப்படி சொல்கிறார்? என்ற குழப்பமும் சில நேரங்களில் அவர்கள் மீது கோபமும் ஏற்படும்.
  • குழந்தைகளிடம் எப்போதுமே அம்மாக்கள் மிகவும் நேசத்துடன் இருக்க வேண்டும்.  உங்களது குழந்தைகள் செய்யக்கூடிய சின்ன சின்ன விஷயங்களைக் கூட பாராட்டுகள். எதையும் தயக்கம்  இன்றி செய்வதற்கான வாய்ப்புகளையும் வழங்கவும். மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறும் போது, அம்மாக்களின் மீதான பாசம் அதிகரிக்கக்கூடும்.
  • குழந்தைகளுடன் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி விளையாடுங்கள். இது அவர்களின் மனநிலையை மட்டுமல்ல, குழந்தைகளின் மனநிலையையும் உற்சாகம் அடையச் செய்யும். அதிலும் அம்மாக்கள் விளையாடும் போது அதன் பாசமே தனி தான். 

மேலும் படிக்க: குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் விஷயங்கள் இவை தான்!

enjoy life

இனி உங்களது குழந்தைகளுக்கு சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் கொஞ்சம் இந்த சின்ன சின்ன விஷயங்களை அம்மாக்கள் கட்டாயம் பின்பற்றவும்.

Image source - Google 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com