'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?' என்று கேள்வி எழுப்பிய இந்த சமூகத்தில் இன்று பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் சொந்த காலில் நிற்பதை பெருமையாக பார்க்கிறார்கள். இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலரும் சுய தொழில் ஆரம்பித்து விட்டனர். சினிமாவில் நடிகையாக இருந்தால் என்ன? சுயமாக தொழில் துவங்கும் போது தான் அவர்கள் இன்னும் ஸ்ட்ராங்காக உணர்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
சினிமா ஒரு பக்கம் கடினமாக இருக்க, அதே போல தொழில் துவங்குவதும் கடினம் தான். அப்படி சினிமா துறையில் இருந்துக்கொண்டே வெற்றிகரமாக சுய தொழில் செய்யும் சில நடிகைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஸ்ருதிகாவின் ஹேப்பி ஹெர்ப்ஸ்:
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்த ஸ்ருதிகா சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். நடிகை சுருதிஹா அர்ஜுன் தற்போது தொழில் துறையில் தனக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கி இருக்கிறார். 'ஹேப்பி ஹெர்ப்ஸ்' என்ற இயற்கை ஆயுர்வேத சரும பராமரிப்பு பொருட்கள் மூலம் ஆயுர்வேத அழகு சந்தையில் முன்னணி நிறுவனமாக மாறி, உலக அளவில் வாடிக்கையாளர்கள் மனதை வென்றுள்ளார். 'ஹேப்பி ஹெர்ப்ஸ்' ஆயுர்வேதத்தின் பண்டைய கால ஞானத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான சரும பராமரிப்பு பொருட்களை வழங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் இவர் 'தறி பை ஸ்ருதிகா' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைத்தறியில் நெய்யப்படும் புடவைகளை மலிவான விலையில் விற்றும் வருகிறார்.
சமந்தாவின் சகி:
பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகை சமந்தா. இவர் தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடிகை சமந்தா பிரபலம் தான். சகி என்பது பெண்களுக்கான பிரத்தியேக ஆடை பிராண்டுகளில் ஒன்று. இது பெங்களூருவை சேர்ந்த பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டில் பிரபல நடிகை சமந்தா உலக அளவில் உள்ள பெண்களுக்காக ஆரம்பித்த ஒரு ஆன்லைன் ஆடை பிராண்டு சகி என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவின் ஃபெமி 9:
2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா, தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக மாறி உள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது சினிமா துறையில் மட்டும் இன்றி சுய தொழில் துறையிலும் கால் பதித்துள்ளார். 'ஃபெமி 9' என்ற சானிட்டரி நாப்கின்ஸ் பிராண்ட் மற்றும் 'ஸ்கின் 9' என்ற சரும அழகு பொருட்கள் தயாரிக்கும் ஆன்லைன் கம்பெனியும் நடிகை நயன்தாராவின் பெண்களுக்கான பிரத்யேக சுய தொழில் பிராண்டுகள் ஆகும். இது மட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா 'தி லிப் பாம் கம்பெனி' என்ற ஒரு லிப் பாம் ஆன்லைன் கம்பெனியும் வைத்துள்ளார்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation