அரங்கம் அதிர கூலி படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. விசில் பறக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உரையாற்ற உள்ளதாகவும் படக்குழு வீடியோ பகிர்ந்துள்ளது. ஜூலை 28ஆம் தேதி தனுஷ், துலகர் சல்மான் பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி இருவரின் பட அப்டேட்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு குடும்ப படங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படமும் வசூலை குவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த், இதர நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கூலி படத்தின் முன்பதிவு தொடங்கி கோடிகளில் குவிக்க தொடங்கியுள்ளது. பேன் இந்தியா படமான வார் 2-ஐ விட ஒட்டுமொத்த இந்தியா திரையுலகின் கவனமும் கூலி பக்கம் திரும்பியுள்ளது.
துல்கர் சல்மானின் பிறந்தநாளையொட்டி செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் காந்தா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதர் பற்றிய படமாக காந்தா உருவாகி வருகிறது. நடிகருக்கும் இயக்குநருக்குமான மோதலை படமாக எடுத்துள்ளனர். பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளர். சமுத்திரக்கனிக்கு முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் இந்த வார இறுதிக்குள் மொத்தமாக 50 கோடி ரூபாய் வசூலை பெறும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மகாராஜா படத்திற்கு பிறகு தலைவன் தலைவி விஜய் சேதுபதிக்கு வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
கெளதம் கணபதி இயக்கத்தில் பிக்பாஸ் தர்ஷன் நடித்துள்ள சரண்டர் படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. காவல் அதிகாரியாக தர்ஷன் நடித்துள்ளார். 2015ல் வெளிவந்து தேசிய விருது வென்ற படமான குற்றம் கடிதலின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்தின் முன்னோட்டை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலக தகவல்களை தெரிந்துகொள்ள ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com