
அ.விநோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்திற்கு ஜனநாயகன் என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் பூஜா ஹெக்டே, பிரேமலு மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, அஞ்சாதே நரேன், கெளதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசைமையக்கிறார். அக்டோபர் 4ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு 70 விழுக்காடு முடிவடைந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கிடைத்துள்ளது. இன்னும் 25 நாட்களில் சூட்டிங்கை முடித்து விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
சென்னையில் அக்டோபர் 4ஆம் தேதி பூஜையுடன் விஜயின் ஜனநாயகன் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் 10 நாட்களில் பெரிய செட் அமைத்து விஜய், பூஜா ஹெக்டேவின் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து படக்குழு சூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றது. புத்தாண்டுக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று இரண்டு போஸ்டர்கள் வெளியாகின. மாஸ்டர் படத்தின் சூட்டிங்கின் போது நெய்வேலியில் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது போலவும், எம்ஜிஆர் நான் ஆணையிட்டால் பாடலில் சாட்டையை சுழற்றவது போலவும் இரண்டு போஸ்டர்கள் வெளியாகின.
விஜயும் இதனிடையே கட்சியின் முதல் மாநாட்டை நடத்திவிட்டார். இந்த நிலையில் ஜனநாயகன் படப்பிடிப்பு 25 நாட்களில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. 2026 பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளாராம். கட்சியின் மாநாட்டில் மீண்டும் சினிமாவுக்கு திரும்ப வாய்ப்பில்லை என கூறிய நிலையில் ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். லோகேஷ் கனகராஜின் லியோ 2 கனவும் கலைந்துவிட்டது. ஜனநாயகன் திரைப்படம் தெலுங்குவில் வெளிவந்த பகவந்த் கேசரியின் ரீமேக் என பேசப்படுகிறது.
மேலும் படிங்க பொன்மேன் விமர்சனம் : பொன் இல்லா பெண் அழகு; மிரட்டும் பசில் ஜோசப்
விஜய் அரசியலுக்கு சென்றாலும் அவரை திரையில் காண வேண்டும் என்ற ரசிகர்கள்ன் ஆசைக்காக படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஏற்கெனவே கில்லி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய், ரீமாசென் நடித்த பகவதி திரைப்படமும், விஜய், ஜெனீலியா நடித்த சச்சின் திரைப்படமும் ரீ-ரிலீசாகின்றன. ஏப்ரல் 18ஆம் தேதி சச்சின் வெளியாகிறது. தளபதி 69 விஜயின் கடைசி படம் என்பதால் இனி ரீ-ரிலீஸ் படங்களின் மூலமாகவே விஜயை திரையில் இனி பார்க்க முடியும்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகே விஜயின் திரையுலக பயணம் தொடருமா என்பது தெரிய வரும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com