ஜோதிஷ் சங்கர் இயக்கத்தில் பசில் ஜோசப் நடித்த பொன்மேன் திரைப்படம் ஓடிடி தளத்தில் மார்ச் 14ஆம் தேதி வெளியாகியுள்ளது. ஆவேஷம் சஜின் கோபு, லிஜோ மோல் ஜோஸ், ஆனந்த் மன்மதன், சந்தியா ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொன்மேன் திரைப்படம் மலையாள சினிமாவில் மற்றொரு அழுத்தமான கதைக்களம் கொண்ட படமாகும். திரையரங்குகளில் இப்படம் வெளியான போது பெரிய வரவேற்பு கிடைக்காதது வருத்தமே. தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. வாய்ப்பை தவறவிடாதீர்கள். வாருங்கள் பொன்மேன் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
வரதட்சணை கொடுமையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படம் இந்த பொன்மேன்.
சஜின் கோபு - லிஜோ மோல் ஜோஸிற்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. 25 சவரன் நகை வரதட்சணைக்கு லிஜோ மோல் ஜோஸ் குடும்பமும் ஒப்புக்கொள்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கி கொள்வதால் அவரசத்திற்காக திருமணத்திற்கு ஒப்பந்த நகை வழங்கும் ஏஜென்ட் பசில் ஜோசபின் உதவியை நாடுகின்றனர். கொடுத்த நகைக்கு இணையாக திருமணத்தில் கிடைக்கும் மொய் பணத்தை எடுத்துக் கொள்ளப்படும் என்பதே அந்த ஒப்பந்தம். திருமணம் முடிந்தாலும் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. இதனால் நகையை பெற்றுக்கொள்ள பசில் ஜோசப் முயற்சிக்கிறார். இதில் பல சிக்கல்களை எதிர்கொண்டாலும் மனம் தளராமல் நகையை வாங்கி விட வேண்டும் என முயற்சிக்கிறார். அவர் அந்த நகைகளை திரும்ப பெற்றாரா ? இல்லையா ? என்பதே பொன்மேன்.
ஒரு சில மது அருந்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். கதைக்களத்திற்கு தேவையே இல்லாதது போல் தெரிந்தது.
ரேட்டிங் - 4.25 / 5
பெண்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. எப்படி லஞ்சம் வாங்குவது குற்றம், கொடுப்பது குற்றமோ அதே போல வரதட்சணை வாங்குவது குற்றம், கொடுப்பது குற்றம் என புரிந்துகொள்ள வேண்டிய நேரமிது.
மேலும் படிங்க பெருசு விமர்சனம் : பெருசா சொல்றதுக்கு ஒன்னுமில்லை; வைபவுக்கு என்ன ஆச்சு ?
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com