
அ.விநோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். அரசியல் பயணத்திற்கு முன்பாக விஜய் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் சூட்டிங் சென்னையில் அக்டோபர் 4ஆம் தேதி, 2024ல் தொடங்கியது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் குடியரசு தினத்தன்று இரண்டு போஸ்டர்கள் மட்டும் வெளியாகியன. மே மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என கூறப்படும் நிலையில் படக்குழு தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. 2026 பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜனநாயகன் வெளியாகவுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், டிஜே அருணாச்சலம், மமிதா பைஜு, கெளதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 2026 பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை கொண்டாடப்படும் நிலையில் பத்து நாள் தொடர் விடுமுறையை கணக்கிட்டு படக்குழு ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீசாகும் என அறிவித்திருந்தது. விஜய் நடிக்க ஆரம்பித்தது முதல் பொங்கல் பண்டிகைக்கு அவருடைய 15 படங்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பாக 2023 பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. முதல் முறையாக ஒரு வருடத்தில் விஜய்யின் படங்கள் வெளியாக போவதில்லை.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. ஸ்ரீலீலா, அதர்வா முரளி, ரவி மோகன் நடித்து வருகின்றனர். புது வரவாக கேரள நடிகர் பசில் ஜோசப் படத்தில் இணைந்துள்ளார். இந்தி திணிப்பை எதிர்த்து 1960களில் நடந்த மொழிப் போர் பற்றிய வரலாற்று படமாக பராசக்தி உருவாகி வருகிறது. இப்படமும் பொங்கல் வெளியீட்டுக்கு வாய்ப்பு என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது படத்தின் சூட்டிங் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
மேலும் படிங்க 25 நாட்களில் சினிமாவுக்கு விஜய் முழுக்கு; போகாதீங்க அண்ணா கதறும் ரசிகர்கள்
குட் பேட் அக்லி, ரெட்ரோ, தக் லைஃப், கூலி, இட்லி கடை என வரிசையாக பெரிய நடிகர்களின் படங்கள் அணிவகுத்து இருப்பதால் ஜனநாயகன், பராசக்தி படங்கள் பொங்கல் பண்டிகை வெளியீட்டை குறிவைத்துள்ளன. 2025 பொங்கலுக்கு விடாமுயற்சி படக்குழு இறுதி நேரத்தில் சொதப்பியதால் திரையரங்குகள் களை இழந்தன. பராசக்தி ரிலீஸ் தேதி முடிவாகாத நிலையில் ஜனநாயகன் ரிலீஸில் இருந்து 5 நாட்கள் கழித்து ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் அப்படம் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com