லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் மார்கன் படம் வெளிவந்தது. சமுத்திரக்கனி, பிரிகிதா சகா, மகாநதி ஷங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அஜய் திஷன் இப்படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். விஜய் ஆண்டனியே படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். க்ரைம் திரில்லராக வெளியாகி இருக்கும் மார்கன் எப்படி இருக்கு ? வாருங்கள் பார்ப்போம்.
மார்கன் கதைச்சுருக்கம்
சென்னையில் நிகழும் நூதன கொலையை தொடர் கொலையாக கருதி விஜய் ஆண்டனி விசாரிக்க தொடங்குகிறார். தனித்திறன் கொண்ட இளைஞனின் உதவியோடு கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். அடுத்த கொலையை தடுத்தனரா ? கொலையாளியின் நோக்கம் என்ன ? என்பதே மார்கன்.
மார்கன் விமர்சனம்
சென்னையில் பெண் ஒருவரின் நூதன கொலையை தனது மகளின் கொலையுடன் ஒப்பிட்டு விசாரிப்பதற்காக விஜய் ஆண்டனி மும்பையில் இருந்து வருகிறார். கொலையாளியை தேடும் முயற்சியில் தனித்திறன் கொண்ட இளைஞனை கண்டுபிடிக்கின்றார். விசாரணயை துரிதப்படுத்தினாலும் அடுத்த கொலை நடந்துவிடுகிறது. தனித்திறன் கொண்ட இளைஞனின் உதவியோடு விஜய் ஆண்டனி கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை 2 மணி நேர கிரைம் த்ரில்லர் படமாக எடுத்துள்ளனர்.
மார்கன் படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- நிறவெறி பற்றி தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட படங்கள் குறைவே. நிறத்தை குறிப்பிட்டு சிலர் கிண்டலடித்தாலும் நம் சமூகம் அதை பொருட்படுத்துவதில்லை. இதில் மனரீதியாக காயப்படும் நபர்கள் எந்த மாதிரியான முடிவை எடுக்க வாய்ப்புண்டு என சமூகத்திற்கு செய்தி சொல்லி இருக்கின்றனர்.
- தனித்திறன் கொண்ட அஜய் திஷனின் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பு. நம்பிக்கைக்கு மிஞ்சி சில காட்சிகள் இருந்தாலும் நீர் மனிதனை சூப்பர் ஹீரோ போல் லாஜிக் இன்றி நம்ப வைக்கின்றனர்.
- இறுதிவரை யார் கொலையாளி, கொலைக்கான நோக்கம் என்ன ? திரைக்கதையில் இருந்து ரசிகர்களை விலகச் செய்திடாமல் எதிர்பாராத ட்விஸ்ட் சொல்லி ஓரளவு நியாயம் செய்திருக்கின்றனர்.
- விஜய் ஆண்டனியின் பின்னணி இசை, இறுதியில் இடம்பெறும் பாடல் படத்திற்கு சற்று வலு சேர்க்கிறது.
மார்கன் படத்தின் நெகட்டிவ்ஸ்
- அஜய் திஷனின் காதல் காட்சிகள் படத்திற்கு தேவையற்றது. அஜய் திஷனின் கதபாத்திரம் படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனியை மறக்கடிக்கும் வகையில் உள்ளது.
- அனுபவமிக்க காவல் அதிகாரி விஜய் ஆண்டனி கொலையாளியை கண்டுபிடிக்காமல் இளைஞனின் தனித்திறனை ஆராய்ச்சி செய்வது நேர வீணடிப்பு.
- தன் நண்பர்களை விஜய் ஆண்டனி தீர்த்து கட்டியது தெரிந்தும் கொலையாளி அவரை ஏன் விட்டு வைத்தார் என்ற சந்தேகம் எழுகிறது.
மார்கன் படத்தின் ரேட்டிங் - 3.25 / 5
க்ரைம் திரில்லர் படங்களை விரும்பும் நபர்களுக்கு மார்கன் படம் நிச்சயம் பிடிக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation