herzindagi
abusivetalk issue

லியோவில் நடித்ததால் எனக்கு பல பிரச்சினை - திரிஷாவை மீண்டும் வம்பிழுக்கும் மன்சூர்

சர்ச்சை பேச்சால் மன்சூர் அலிகானுடன் நடிக்க போவதில்லை என திரிஷா தெரிவித்திருந்தார். இதற்கு வழக்கு தொடரப் போவதாக மன்சூர் அலிகான் எச்சரித்துள்ளார்.
Editorial
Updated:- 2023-12-12, 22:18 IST

லியோ படத்தின் கதாநாயகி திரிஷாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பெரும் சிக்கலில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மாட்டிக் கொண்டுள்ளார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில் , நடிகர் சங்கத்திற்கு மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் சரக்கு படத்தின் வெளியீடு குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது பற்றி சர்ச்சையாக பேசினார். லியோவில் திரிஷாவுடன் பாலியல் வன்புணர்வு காட்சியில் நடிக்க முடியவில்லை என்றும் படபிடிப்புக்காக காஷ்மீர் சென்ற போது திரிஷாவை கண்ணில் கூட காட்டவில்லை என்றும் கூறினார். 

trisha issue

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு நடிகை திரிஷா மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தார். அவரது பேச்சு அறுவெறுக்கதக்கது, ஆபாசமானது, மரியாதையற்றது எனவும் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார் எனவும் பதிவிட்டு இருந்தார். 

மேலும் படிங்க  சிவப்பு நிற உடையில் ரசிக்க வைக்கும் நடிகை அதுல்யா

நல்ல வேளையாக அவருடன் இணைந்து நடிக்கவில்லை, இனியும் அது நடக்க வாய்ப்பில்லை என திரிஷா கூறினார். இதையடுத்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரிஷாவுக்கு ஆதரவாக பதிவிட்டு மன்சூர் அலிகானின் நடத்தையை முற்றிலும் கண்டிப்பதாக தெரிவித்தார். ஆனால் இதே மன்சூர் அலிகான் லியோ படத்தின் வெற்றி விழாவில் மடோனா செபாஸ்டியனை முகம் சுழிக்க வைக்கும் வகையில் பேசியதை ஏன் லோகேஷ் கனகராஜ் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்தனர். 

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் , திரிஷாவின் கண்டன பதிவுக்கு மன்சூர் அலிகான் கடிதம் மூலமாக பதிலளித்திருந்தார். அதில் எந்த இடத்திலும் மன்னிப்பு கேட்காத அவர் , யாரோ திரிஷாவிடம் காணொளியை வெட்டி ஒட்டி காண்பித்து விட்டதாகவும் தேர்தலில் ஒரு மிகப்பெரிய கட்சிக்காக போட்டியிடக் கூடிய நேரத்தில் வேண்டுமென்றே இதை பெரிதாக்குவதாகவும் கூறினார்.

இதனிடையே திரிஷாவுக்கு ஆதரவாக மஞ்சிமா மோகன், ரோஜா, சின்மயி, மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பதிவிட்டனர். தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் குஷ்பு இந்த விவகாரத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.

mansoor issue

அதனடிப்படையில் மன்சூர் அலிகான் மீது தமிழக காவல்துறை ஐபிசி 509பி பிரிவிலும் , இதர பிரிவுகளிலும் வழக்குப்பதிந்து நடவடிக்கை வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியது. மன்சூர் அலிகானின் பேச்சு பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகிறது என்றும் தெரிவித்தது. இவற்றையெல்லாம் கவனித்து கொண்டிருந்த நடிகர் சங்கம் திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் ஊடகங்கள் முன்பாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தியது.

மேலும் படிங்க பார்பி டால் போல இருக்கும் நடிகை மிருணாள் தாகூர்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடிகனின் கதாபாத்திரமாக தான் பாலியல் வன்புணர்வு காட்சியை பேசியதாகவும் தவறாக எதுவும் குறிப்பிடவில்லை என்றார். தான் பேசியதை திரிஷா தவறாக புரிந்து கொண்டார் எனவும் தன்னுடன் நடிக்க மாட்டேன் எனக் கூறியதற்காக அவர் மீது வழக்கு தொடுப்பேன் எனவும் பேசினார்.

மேலும் இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும், அங்கு இருப்பவர்கள் மிகவும் யோக்கியமா என கடுமையாக சாடினார். சர்ச்சை பேச்சுக்கு படத்தின் நாயகி, டப்பிங் ஆர்டிஸ்ட், இயக்குநர், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து விட்ட நிலையில் படத்தில் ஓடி ஓடி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் விஜய் இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் காப்பது ஏன் என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com