big boss season 7 update: பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் பூகம்பம் டாஸ்க் அதிரும் ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் சீசன் 7  சிக்க வைத்து வைத்துச் செய்யும் பிக்பாஸ் தினரும் போட்டியாளர்கள் 

  • Shobana M
  • Editorial
  • Updated - 2023-11-21, 21:27 IST
bbs

பிக் பாஸ் சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை போல் தோன்றினாலும் குறைந்து கொண்டே வருகின்றது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 50 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் இன்னும் சுவாரசியம் நிறைந்து காணப்பட வேண்டும் என்று 5 போட்டியாளர்களைக் வைல்டு கார்டு மூலமாக உள்ளே அனுப்பியது.

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் வலிமையான போட்டியாளர்களாக நின்று ஆடினர் என்றே சொல்லலாம். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் மூன்று பூகம்பங்களை அறிமுகப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கப்படும் டாஸ்குகளை வெல்ல வேண்டும் இல்லை எனில் புதிதாக வைல்டு கார்டு போட்டியாளர்களாக ஏற்கனவே வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் உள்ளே வரும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 பூகம்பம் போட்டியைச் சிறிதும் எதிர்பாராத போட்டியாளர்கள் யார் அடுத்து வெளியேறுவது என்று மாயா, பூர்ணிமா, ஜோவிகா ஆகியோர் ஒரு பக்கம் பேசிக் கொள்கின்றனர். மறுபக்கம் விஷ்ணு மற்றும் கூல் சுரேஷ் பேசிக் கொள்கின்றனர். அதனை அடுத்து அர்ச்சனா விசித்திராவும் இதுகுறித்து பேசிக் கொள்கின்றனர். நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க் அனைத்தும் மிகவும் கடினமாக இருந்தது. அதில் வெற்றி பெற கடமையாக மெனகெட வேண்டியதாக இருந்தது. இருப்பினும் இது இயலாத காரியமாகவும் இருக்கின்றது. இதற்கிடையில் அடுத்த வரும் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்ற பேச்சும் இவர்களுக்கிடையே இருக்கின்றது.

பிக் பாஸ் சீசன் 7 எதிர்பார்த்ததை விட அதிகமான டிரஸ்ட்டுகள் மற்றும் போட்டிகள் இரண்டு வீடுகள் கடுமையான டாஸ்க் என்று கட்டம் கட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது மக்களுக்கு ஒரு வித சலிப்பை தந்து விட்டது என்றே சொல்லலாம். பிக் பாஸ் சீசன் 7 பிரதீப் வெளியேறியது. கமலஹாசன் பேசிய விதம் ஆகியவற்றால் எதிர்மறை கருத்துக்களையும் பெற்று வருகின்றது. இந்த நேரத்தில் பிக் பாஸ் சீசன் 7 அடுத்தடுத்து என்ன நடக்கின்றது என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்தும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

bgs

பிக் பாஸ் சீசன் 7 விஷ்ணு மற்றும் பூர்ணிமா இருவரும் அவரவர் நிலையில் படும் கில்லாடியாக இருந்து விளையாட்டை ஜெயிக்க போட்டியிடுகின்றனர். மாயாவை வைத்துப் போட்டியில் வெல்ல திட்டமிடுகின்றார்.

பூர்ணிமா ஆனால் மற்றொரு பக்கம் பூர்ணிமாவுக்கு டேக்கொடுத்து அவரை வெளியே அனுப்ப விஷ்ணு மறுபக்கம் திட்டமிடுகின்றார். பூர்ணிமாவுக்கு கவலை என்னவெனில் மூன்று பேர் உள்ளே வரும்போது இரண்டு பேர் வெளியே போவார்கள் அதில் தானும் வெளியேற வேண்டிய சூழல் வரும் என்று கவலைப்படுகின்றார். அது மாயாவையும் ஒரு பக்கம் கவலையை அடையச் செய்கின்றது. தினசரி புதிய டாஸ்க் அப்டேட்டுகள் என்று பிக் பாஸ் சீசன் 7 ஓடிக் கொண்டிருந்தாலும் அது கலாச்சார சீரழிவு என்று அதன் மேல் தனி வழக்கு தொடுக்க சில தன்னார்வ மனிதர்கள் முயற்சிக்கின்றனர், அதைப் பற்றி விமர்சிக்கவும் செய்கின்றனர். பாப்போம் அடுத்தது பிக் பாஸ் போக்கில் எவ்வாறு இருக்கும் என்று போகப்போக தான் தெரியும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP