ps 2 : தரிசனம் கிடைக்குமா தேவி? த்ரிஷாவுக்கு ட்விட்டரில் மெசேஜ் அனுப்பிய கார்த்தி

பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக வேற லெவல் புரமோஷனில் இறங்கியுள்ளனர் குந்தவையாக நடிக்கும் த்ரிஷாவும் வந்திய தேவனான கார்த்தியும். இவர்களின் கியூட் ட்விட்டர் சாட் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ps karthi

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான புரமோஷனில் வேற லெவலில் இறங்கி விட்டனர் த்ரிஷாவும் கார்த்தியும். த்ரிஷா படத்தில் குந்தவையாக நடித்து இருக்கிறார். அதே போல் ஆல் ரவுண்டர் வந்தியதேவன் ரோலில் கார்த்தி நடித்துள்ளார். கடந்தாண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி 500 கோடி வசூலை தாண்டியது. ட்விஸ்டுடன் முடிக்கப்பட்ட பொன்னியின் செல்வனின் 2வது பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

முதல் பாகத்திற்கான புரமோஷன் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. நடிகர், நடிகைகளும் ஊர் ஊராக பறந்து சென்று படத்திற்கு புரமோஷன் செய்தனர். இந்நிலையில் 2வது பாகத்திற்கான ரிலீஸூக்கு இன்னும் 1 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் முதல் பாடல் ’அகநக’ நேற்று மாலை வெளியானது. ரசிகர்களை இந்த பாடல் வைப் செய்ய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ட்விட்டரில் த்ரிஷாவை வம்பிழுக்கும் வகையில் மெசேஜ் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கார்த்தி. ஏற்கெனவே லைவ் லோஷேன் அனுப்புங்கள் தேவி என கார்த்தி , த்ரிஷாவை ட்விட்டரில் விளையாட்டாக கேலி செய்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இப்போது மறுபடியும் அதே போல் த்ரிஷாவுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார் கார்த்தி.

karthi twitter

இளையபிராட்டி… hi” என த்ரிஷாவை டேக் செய்து வந்தியத்தேவன் கார்த்தி ட்வீர் செய்தார். அதற்கு த்ரிஷா நீண்ட நேரம் பதிலளிக்கவில்லை. திரும்பவும் கார்த்தி, த்ரிஷாவை டேக் செய்து என்ன பதிலே இல்லை என கேட்டார். இப்போது த்ரிஷா ஆன்லைன் வர பேச்சுவார்த்தை தீவிரமானது. ”என்ன வாணர்குல இளவரசே?” என த்ரிஷா கேட்க, ”தங்கள் தரிசனம் கிடைக்குமா தேவி?” என்றார் கார்த்தி. உடனே த்ரிஷா அதற்கு, ”ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்” என கூற அதற்கு கார்த்தி வழக்கம் போல் பஞ்ச் ஒன்றை கொடுத்தார்.

“கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?” என கார்த்தி சொல்ல, வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ? என ரிப்ளை செய்தார் த்ரிஷா.

trisha twitter

”ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்” என கூறி உரையாடலை முடித்து வைத்தார் கார்த்தி. த்ரிஷா மற்றும் கார்த்தியின் இந்த வித்தியாசமான புரமோஷன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதே சமயம் பலரும் இதை கலாய்த்தும் தள்ளி இருக்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்:சாகுந்தலம் படத்தை பார்த்துவிட்டு சமந்தா போட்ட நெகிழ்ச்சி பதிவு

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP