ponniyin selvan : பொன்னியின் செல்வன் 02 - ‘அக நக’ பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடலை வெளியிடும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. எப்போது தெரியுமா? இந்த பாடல் யாருக்கானது? பிற தகவல்களை தொடர்ந்து படிக்கலாமே.

ponniyin selvan second part single track release date announced

பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என எல்லோரும் ஆவலோடு காத்திருந்தபோது, ஏப்ரல் 28 வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

அன்று முதல் எப்போது டிரைலர் ரிலீசாகும், பாடல்கள் ரிலீசாகும் என எதிர்பார்ப்புகள் எல்லோருக்கும் பல மடங்கு பெருகி இருந்தது. இந்த சூழலில் தான், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான 'அக நக' பாடலை வரும் மார்ச் 20 ஆம் தேதி 6 மணிக்கு படக்குழு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்கான புது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில், குந்தவை திரிஷாவின் கைகளில் கூர்மையான வாள் ஒன்று இருக்க, அதன் அருகில் வல்லவராயன் வந்தியத்தேவனான கார்த்தியின் கண்கள் துணிகளால் கட்டப்பட்டுள்ளது.

song release date

பொன்னியின் செல்வன் புத்தகத்தில் குந்தவை மற்றும் வந்தியத்தேவன் தொடர்புடைய காட்சிகள் தான் பலருக்கும் பேவரிட். அதனால், இந்த காட்சி திரைப்படத்தில் எந்த இடத்தில் வருமோ என்ற எதிர்பார்ப்பு பலர் மனதிலும் எழுந்துள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் விஷுவல் டிரீட்டாக அமைந்தது. இயக்குனர் மணிரத்தினத்தின் மெனக்கெடல் காட்சிக்கு காட்சி பிரதிபலித்து கண்களுக்கு விருந்து படைத்தது.

அதற்கு பக்க பலமாக அமைந்தது A.R.ரஹ்மானின் பாடல்கள் முதல் திரைப்பட பின்னணி இசை வரை. ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உழைப்பால் காட்சிகள் ஓவியமாய் வரையப்பட்டு கண்களை கவர்ந்தது.

song beautiful scene

இப்படி திரைப்படத்திற்காக உழைத்த ஒவ்வொருவரும் அவர்களுடைய பணியை முழுமையாக செய்ததால் தான் பட்டி தொட்டி எங்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட புகழ் பரவியுள்ளது.

ஏப்ரல் 28 எப்போது வரும்? பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவுக்கு எப்போது போவோம் என பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிறு தீனியாக அமைந்துள்ளது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடம் வெளியீட்டு அறிவிப்பு. உங்களை போல நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

images credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP