அகில் பால், அனாஸ் கான் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஐடென்டிட்டி. இந்த படம் 5 நாட்களில் 20 கோடிக்கு மேல் வசூல், 2025ன் முதல் பிளாக்பஸ்டர் மலையாள படம் என்றெல்லாம் இணையத்தில் பேசப்படுகிறது. உண்மையிலேயே இந்த படம் நன்றாக உள்ளதா ? இல்லையா ? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பகத் பாசிலுக்கு பிறகு மலையாள சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில் நடிப்பவராக டோவினோ தாமஸ் அறியப்படுகிறார். ஐடென்டிட்டி திரைப்படம் அவருடைய நடிப்பு திறமைக்கு தீனி போட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு கொலையை நேரில் கண்டவர், கொலையை செய்தவர், கொலையாளியை கண்டுபிடிக்கும் அதிகாரி என மூன்று பேரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளி பற்றி பல ட்விட்ஸ்களுடன் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளனர்.
உடை மாற்றும் அறையில் பெண்களை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்த நபரை திரிஷா அடையாளம் காண்கிறார். வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக வினய் நடித்திருக்கிறார். கொலை செய்த நபரை கண்டுபிடிக்க டோவினோ தாமஸ் வினய்க்கு உதவுகிறார். பெங்களூருவில் பணியாற்றும் திரிஷா கோவைக்கு வந்து கொலையை கண்டது எப்படி ? டோவினோ தாமஸிற்கும் கொலை செய்யப்பட்ட நபருக்குமான தொடர்பு, வினய் இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் விசாரிக்க என்ன காரணம் என பல விஷயங்களை ஒற்றை புள்ளியில் முடித்து கிளைமேக்ஸ் நோக்கி படம் நகர்கிறது.
மேலும் படிங்க கிச்சா சுதீப்பின் மேக்ஸ் திரைப்படம் விமர்சனம்; நம்பி வாங்க சந்தோஷமா போங்க
ரேட்டிங் - 2.25 / 5
இரட்டா, திரிஷ்யம், துருவங்கள் 16 படங்களை போல த்ரில்லராக ஐடென்டிட்டி இருக்கும் என படம் பார்க்கும் நபர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com