சாக்லேட் பாய் என ரசிகைகளால் செல்லமாக அழைக்கப்பட்ட ஜெயம் ரவி செப்டம்பர் 10ம் தேதி 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2003ல் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கான ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்தும் தமிழ் திரையுலகில் டாப் 10 நடிகர்களுக்குள் இடம் வகிக்கிறார். குழந்தை நட்சத்திரமாக 3 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். காதலுக்காக ஜெயம், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம்.... ஆக்ஷனுக்காக தனி ஒருவன், அடங்கமறு, பூலோகம்... புதிய முயற்சிகளுக்காக டிக் டிக் டிக், மிருதன்... என படங்களில் வித்தியாசம் காட்டியுள்ளார். ஜெயம் ரவியின் பிறந்தநாளன்று அவரது ஆல் டைம் டாப் 5 படங்களை கண்டு மகிழுங்கள்.
எம்.குமரன்
2004ல் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து. தாய் பாசம், காதல், காமெடி, ஆக்ஷன் நிறைந்த கமர்ஷியல் ரோலுக்கு ஜெயம் ரவி கட்சிதமாகப் பொருந்தி இருந்தார். எத்தனை முறை பார்த்தாலும் மகிழ்ச்சியை கொடுக்கும் படம் எம்.குமரன்.
தனி ஒருவன்
சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளில் மையப்புள்ளியை கண்டுபிடித்து அதை அழிக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக ஜெயம் ரவி கலக்கி இருப்பார். ஜெயம் மோகன் - ரவி அண்ணன் தம்பி காம்போவுக்கு தனி ஒருவன் மற்றும் ஓர் வெற்றிப் படமாகும். அவரது சினிமா பயணத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்த படமும் தனி ஒருவனே. சமூகத்தில் நேர்மையாக விளங்கும் மக்களை தனி ஒருவன் என்றழைக்கும் அளவிற்கு இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பேராண்மை
ஜெயம் ரவியின் வெற்றிப் படங்களில் பலரும் பேராண்மை படத்தை தவறவிடுகின்றனர். இதை நினைவில் கொள்ளாதவர்கள் ஜெயம் ரவியின் பிறந்தநாளில் கட்டாயம் இப்படத்தை பார்க்கவும்.
ரோமியோ ஜூலியட்
உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியன், எங்கேயும் எப்போதும் என ஜெயம் ரவிக்கு காதல் ஹிட் படங்கள் அமைந்திருந்தாலும் ரோமியோ ஜூலியட் எளிதில் மறக்ககூடிய படம் அல்ல. உண்மையான காதலை மறந்து பணத்தை நோக்கி செல்லும் பெண்களுக்கு பாடம் புகட்டியது போல ரோமியோ ஜூலியட் படம் இருந்தது. ஹன்சிகாவை காதலிப்பதை விட அவரிடம் வில்லத்தனம் காட்டி காதலை புரிய வைக்கும் காட்சிகளில் மிரட்டி இருப்பார் ஜெயம் ரவி.
ஜெயம்
ஜெயம் என்ற அடையாளத்தோடு பயணித்து கொண்டிருக்கும் ரவியின் டாப் 5 பட்டியலில் ரீமேக் என்ற ஒரே காரணத்திற்காக ஐந்தாம் இடம் கொடுக்கப்படுகிறது. முதல் படம் என்றாலும் அனைத்து காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பு தென்படும். இப்படத்தில் வரும் திருவிழான்னு வந்தா பாடல் ஆல் டைம் ஹிட்...
கோமாளி படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு வெற்றிப் படங்கள் அமையவில்லை. பொன்னியின் செல்வனும் மல்டி ஸ்டாரர் படமாக அமைந்துவிட்டது. பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்களில் மீண்டும் பழைய ஜெயம் ரவியை பார்க்க ஆசைப்படும் வாசகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation