சித்தா அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வீர தீர சூரன். துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, ப்ருத்வி, மலையாள நடிகர் சூரஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓடிடி உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டதால் வெளியான முதல் நாளில் வீர தீர சூரன் படத்தின் வசூலில் தொய்வு ஏற்பட்டது. எனினும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக படத்தை லாபகரமாக மாற்றி வருகிறது.
முதலாளி விஸ்வாசம் காரணமாக கொலையாளி வேடம் எடுக்கும் விக்ரம் ஒரு கட்டத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக விபரீதமான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். கொலையை திட்டமிட்டபடி முடித்தாரா அல்லது குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே வீர தீர சூரன்.
மதுரை மாவட்டத்தின் கிராமப் பகுதியில் மளிகை கடை நடத்தும் விக்ரமிடம் முதலாளி ப்ருத்வி தன்னையும், மகன் சூரஜ்ஜையும் காப்பாற்றும்படி உதவி கேட்கிறார். விக்ரமும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு காவல் அதிகாரி எஸ்.ஜே.சூர்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். விக்ரமை முழுமையாக நம்பாத சூரஜ் அவருடைய குடும்பத்தை ஆட்கள் வைத்து பின்தொடர்கிறார். இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். விக்ரம் யாரை கொலை செய்து யாரை காப்பாற்றினார் ? குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே 5-6 மணி நேரத்திற்குள் நடக்கும் வீர தீர சூரன்.
மேலும் படிங்க Officer on duty : மலையாள சினிமாவின் மற்றொரு வேட்டையாடு விளையாடு; சேட்டன்ஸ் ஸ்பெஷல்
ரேட்டிங் - 3.5 / 5
பல வேஷம் போட்டு நடிப்பது, உடல் எடையை ஏற்றுவது இறக்குவது போன்ற வேலைகளை செய்யாமல் விக்ரம் தொடர்ந்து இதுபோன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com