ஆலப்புழா ஜிம்கானா விமர்சனம் : குட்டி சேட்டன்களின் பாக்ஸிங் படம் எப்படி இருக்கு ?

கலித் ரஹ்மான் இயக்கத்தில் வெளிவந்த ஆலப்புழா ஜிம்கானா படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். முக்கியமான விஷயம் படத்தின் இயக்குனர் கலித் ரஹ்மான் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
image

கலித் ரஹ்மான் இயக்கத்தில் நஸ்லன் கஃபூர் வெளிவந்த திரைப்படம் ஆலப்புழா ஜிம்கானா. மம்மூட்டியின் பசூகா, பசில் ஜோசப்பின் மரண மாஸ் படங்களை தாண்டி ஆலப்புழா ஜிம்கானாவிற்கு கேரளாவில் சேட்டன்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
12ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் அடுத்ததாக உருப்படியான காரியம் செய்து வாழ்க்கையில் முன்னேற நினைக்கின்றனர். அதில் வெற்றி அடைந்தார்களா ? இல்லையா என்பதே ஆலப்புழா ஜிம்கானா.வாருங்கள் ஆலப்புழா ஜிம்கானா விமர்சனத்தை பார்க்கலாம்.

ஆலப்புழா ஜிம்கானா விமர்சனம்

12ஆம் வகுப்பில் தோல்வியடையந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருப்படியாக ஒரு காரியம் செய்ய நினைக்கின்றனர். மாநில அளவிலான பாக்ஸிங்கில் வென்றால் சிறப்பு மதிப்பெண் பெற்று தேர்வு எழுதாமல் கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என எண்ணுகின்றனர். இதையடுத்து பாக்ஸிங் கற்றுக்கொண்டு பதக்கம் வென்றார்களா ? இல்லையா என்பதே ஆலப்புழா ஜிம்கானா. இதற்குள் ஹீரோவிற்கான காதல் ட்ராக்கும் உள்ளது.

ஆலப்புழா ஜிம்கானா பாஸிட்டிவ்ஸ்

  • ஹீரோ நஸ்லன் கஃபூர் அவருடைய நண்பர்களும் செய்யும் அட்டகாசங்கள் பள்ளி பருவத்தையும், இன்றைய தலைமுறையினர் செயல்களை அச்சு அசலாக பிரதிபலிக்கிறது.
  • படத்தின் மூன்று பெண் கதாபாத்திரங்களும், அவர்களுக்கான கதாபாத்திர வடிவமைப்பும் அற்புதம். குத்துச்சண்டை வீராங்கனையாக அனகா ரவி கலக்கி இருக்கிறார்.
  • இரண்டாம் பாதியில் குத்துச்சண்டை காட்சிகளை தத்ரூபமாக காட்டிய விதம் பாராட்டுக்குரியது. வெறுமனே குத்துச்சண்டை காட்சிகளை காண்பிக்காமல் நுட்பமாகவும், படம் பார்க்கும் நபர்களுக்கும் குத்துச்சண்டை பற்றி விளக்கியது சிறப்பு.
  • பெரிய ஹீரோக்கள் இன்றி சின்ன பட்ஜெட்டில் ஜாலியான படத்தை கொடுத்து திருப்திபடுத்தியுள்ளனர்.
  • உள்ளூரில் வெட்டி பந்தா செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் வெளியூரிலும் அதே பில்டப் கொடுத்து அடி வாங்கும் காட்சிகள் ரசனைக்குரியவை.

ஆலப்புழா ஜிம்கானா நெகட்டிவ்ஸ்

படத்தின் இரண்டாம் பாதியில் ஏதோ பெரிதாக சாதிக்கப் போகிறார்கள் என எதிர்பார்த்தால் கலகலப்பாகவும், அடி தடியோடும் முடிந்துவிடுகிறது. இது வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் ஹீரோ பற்றிய படமா ? குத்துச்சண்டை படமா ? நமக்கு சொல்ல வரும் விஷயம் என்ன ? தெளிவாக விளக்கி இருக்கலாம்.

ஆலப்புழா ஜிம்கானா ரேட்டிங் - 2.25 / 5

2K கிட்ஸ், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். படத்தின் நாயகன் ஜோ-ஜோவிற்கு பல வாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP