இளையராஜா களியபெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் டென் ஹவர்ஸ். ஏப்ரல் 18ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. பொங்கலுக்கு வெளியீடாக வேண்டிய டென் ஹவர்ஸ் சில பல காரணங்களால் நான்கு மாதங்கள் கழித்து வெளியாகியுள்ளது. கோலிவுட் வட்டாரத்தில் இந்த படம் பற்றி பெரிதும் பேசப்பட்டது. நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்திற்கு பிறகு சிபிராஜிற்கு நல்ல படங்கள் அமையவில்லை. இந்த படம் அவருக்கு கம்பேக் படமா ? வாருங்கள் டென் ஹவர்ஸ் படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
டென் ஹவர்ஸ் கதைச்சுருக்கம்
பெண் கடத்தல், பேருந்தில் கொலை இந்த இரண்டு சம்பவங்களையும் பத்து மணி நேரத்திற்குள் சிபிராஜ் எப்படி திறம்பட விசாரித்து முடிக்கிறார் என்பதே டென் ஹவர்ஸ் படத்தின் கதை.
டென் ஹவர்ஸ் விமர்சனம்
நேர்மையான காவல் அதிகாரி சிபிராஜ் சபரிமலை செல்வதற்கு தயாராக இருக்கிறார். அப்போது பெண் ஒருவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்படுகிறது. விசாரணை தீவிரம் அடையும் நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்தில் பெண் ஒருவர் துன்புறுத்தப்படுவதாக தகவல் கிடைக்கிறது. அங்கு சென்று பார்த்தால் இளைஞர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இப்படி அடுக்கடுக்கான சிக்கல்களை சிபிராஜ் 10 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து முடிப்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளனர்.
டென் ஹவர்ஸ் படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- ஆரம்பத்தில் சிபிராஜ் நேர்மையான காவல் அதிகாரி என்பதற்கு சொல்லப்படும் சிறுகதை அற்புதம். சிபிராஜ் முடிந்தவரை காவல் அதிகாரியாக மிரட்ட முயற்சித்து இருக்கிறார்.
- குற்ற சம்பவங்களை வெவ்வெறு வகைகளில் இணைத்து சுவாரஸ்யமாக சொல்ல முயன்று ஓரளவு வெற்றி பெற்றுள்ளனர்.
- படத்தின் பின்னணி இசை கொஞ்சம் வலுசேர்த்துள்ளது. இறுதிவரை ஒரே பின்னணி இசையை இறுதிவரை பின்பற்றி இருக்கலாம்.
- எங்கும் தொய்வின்றி இரண்டு மணி நேரம் நம் கண்களை திரையை நோக்கி கட்டிப் போட்டதற்காகவே படக்குழுவிற்கு பாராட்டுகள்.
டென் ஹவர்ஸ் படத்தின் நெகட்டிவ்ஸ்
- படத்தின் டப்பிங் மிகப்பெரிய சொதப்பல். 10 மணி நேரத்திற்குள் நடக்கும் கதையில் ஹீரோ உள்பட பலரும் அந்த நாள் அந்த நாள் என தவறாக குறிப்பிடுகின்றனர்.
- பல சிறிய காட்சிகள் படத்தின் நீளத்தை நீட்டிக்க தேவையின்றி ஒட்டி சேர்த்துள்ளனர். ஹாலிவுட் படம் போல் 1.30 மணி நேரத்திலும் படத்தை நிறைவு செய்திருக்கலாம்.
- இவ்வளவு மோசமான குற்றங்களை செய்யும் வில்லனை இறுதிக்கட்டத்தில் சிபிராஜ் எளிதாக புரட்டி எடுத்துவிடுகிறார். வில்லன் கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் வலுசேர்த்திருக்கலாம்.
டென் ஹவர்ஸ் ரேட்டிங் - 3 / 5
படம் ரசிக்கும்படியே உள்ளது. ஒரு முறை திரையரங்குகளில் தாராளமாக பார்க்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation