image

தண்டேல் விமசர்னம் : சாய் பல்லவியின் நடிப்பு எப்படி இருக்கு ? நாக சைதன்யாவுக்கு கம்பேக் படமா ?

சாய் பல்லவி, நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்துள்ள தண்டேல் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தண்டேல் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் தண்டேல் திரைப்படம் உலகளவில் 21 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-02-08, 19:19 IST

சண்டூ மொண்டெட்டி இயக்கத்தில் சாய் பல்லவி, நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஆடுகளம் கருணாகரன், பப்ளூ பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லவ் ஸ்டோரி திரைப்படத்திற்கு பிறகு சாய் பல்லவி - நாக சைதன்யா தண்டேல் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தண்டேல் கதைச் சுருக்கம்

மீன்பிடி தொழில் செய்யும் நாகசைதன்யா எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் கடற்படையிடம் சிக்கி சிறைக்கு செல்கிறார். அவரை வெளியே கொண்டுவர காதலி சாய் பல்லவி எடுக்கும் முயற்சிகளே தண்டேல் படத்தின் கதை

தண்டேல் கதைச் சுருக்கம்

தனது எதிர்ப்பை மீறி கடலுக்கு செல்லும் நாகசைதன்யாவின் மீது சாய் பல்லவிக்கு கோபம் வருகிறது. கருணாகரனை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்கிறார். இதனிடையே பாகிஸ்தான் கடற்படையிடம் நாகசைதன்யா சிக்கிக் கொண்டதை அறிந்து அவரை காப்பாற்ற முயல்கிறார். கருணாகரனும் அவருக்கு உதவுகிறார். நாகசைதன்யா பாகிஸ்தான் சிறையில் இருந்து வெளிவந்தாரா ? சாய் பல்லவி - நாகசைத்னா இணைந்தனரா என்பதே தண்டேல். முதல் பாதி, இரண்டாம் பாதி இரண்டுமே பொறுமையாக நகர்கிறது.

தண்டேல் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • அமரன் இந்துவுக்கும் தண்டேல் சத்யாவுக்கும் பெரியளவு வித்தியாசம் இல்லை என்றே சொல்லலாம். நாக சைதன்யாவை விட சாய் பல்லவிக்கே அழுத்தமான கதாபாத்திரம். நடனத்திலும் கவனம் ஈர்க்கிறார்.
  • மீனவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.
  • தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை ஓரளவு காப்பாற்றிவிட்டது.

தண்டேல் படத்தின் நெகட்டிஸ்

  • நாக சைதன்யாவுக்கு கொடுக்கப்பட்ட மாஸ் காட்சிகள் ரசிக்கும்படி இல்லை. சீதா ராமம் படத்தில் துல்கர் கதாபாத்திரத்திற்கு ஏற்படும் அனுதாபம் நாகசைதன்யாவின் கதாபாத்திரத்தின் மீது நமக்கு ஏற்படவில்லை.
  • உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் படத்தில் தேவையற்ற மாஸ் காட்சிகளை தவிர்க்கலாம்.
  • கடலில் மீன் பிடிக்கும் காட்சிகள் அப்பட்டமாக கிராஃபிக்ஸ் என தெரிகிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
  • திரைக்கதையை சண்டூ மொண்டெட்டி, கார்த்திக் தீடா இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம்.

மேலும் படிங்க  Vidaamuyarchi Review : ஹாலிவுட் தரத்தில் அஜித்தின் திரைப்படம்; தல ரசிகர்கள் கொண்டாட்டம்

தண்டேல் ரேட்டிங் - 2.25 / 5

லாஜிக் இல்லாத சண்டை காட்சிகள், கவர்ச்சியான பாடல்கள் கொண்ட மசாலா தெலுங்கு படங்களுக்கு மத்தியில் தண்டேல் தனித்துவமாக தெரிந்தாலும் படமாக்கப்பட்ட விதம் வருத்தத்தை தருகிறது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com