மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், ஆக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், ரம்யா சுப்ரமணியன் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படம் தமிழகத்தில் சோலோ ரிலீசாக வெளிவந்துள்ளது. பிப்ரவரி 6 மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதிகளுக்கு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 2 வருடங்களுக்கு (துணிவு) பிறகு திரையில் தோன்றிய அஜித்தின் திரைப்படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய திரைப்படம் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் ஒரு மாதம் கழித்து இன்று வெளியாகியுள்ளது.
பாலைவன பகுதியில் அஜித் - த்ரிஷா ஜோடி மனித கடத்தல் செய்யும் கும்படலிடம் சிக்கி கொள்கின்றனர். த்ரிஷா கடத்தப்படுகிறார். அவரை அஜித் எப்படி கண்டுபிடித்து மீட்கிறார் என்பதே விடாமுயற்சி.
காதலித்து திருமணம் செய்து கொண்டு 12 ஆண்டுகள் சந்தோஷமாக வாழும் அஜித் - த்ரிஷா பரஸ்பரமாக விவாகரத்து முடிவெடுக்கின்றனர். த்ரிஷாவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை தெரிந்து அஜித் மனம் உடைந்து போகிறார். த்ரிஷாவை அவரது வீட்டிற்கு அழைத்து செல்ல ஒரு பாலைவன நெடுஞ்சாலையில் பயணிக்கின்றனர். அங்கு எதிர்பாராதவிதமாக பெண் கடத்தல் கும்படலிடம் த்ரிஷா சிக்கி கொள்கிறார். அதன் பிறகு அஜித்தின் மனம் தளராத கடுமையான போராட்டமே விடாமுயற்சி. முதல் பாதி யதார்த்தமாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் இருக்கிறது.
மேலும் படிங்க டாமினிக் விமர்சனம் : மம்மூட்டியின் மலையாள துப்பறிவாளன் எப்படி இருக்கு ?
விடாமுயற்சி ரேட்டிங் - 3.5/5
விவாகரத்து கோரும் ஏமாற்று மனைவியின் மனமாற்றம் நம்பும்படியாக இருந்திருக்கலாம். உண்மையாக காதலிக்கும் நபர் உறவில் விரிசலை தவிர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என விடாமுயற்சி படம் தோன்ற வைக்கிறது.
மொத்தத்தில் அஜித்தின் விடாமுயற்சி அவருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com