Custody Tamil Review : முதல் பாதி சூப்பர்.. இரண்டாம் பாதி வேற லெவல்! கஸ்டடி ட்விட்டர் ரிவ்யூ

வெங்கட் பிரபு இயக்கத்தில்  நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிவுள்ளது.கஸ்டடி படத்தின் ரிவ்யூ இதோ..

naga chaitanya custody big

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிவுள்ளது. இந்த திரைப்படம் நாக சைதன்யாவுக்கு தமிழில் முதல் திரைப்படமாகும். வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

naga chaitanya custody


ஹீரோயின்

படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

படம் எப்படி இருக்கு ?

கஸ்டடி திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று விமர்சனத்தை கூறுகின்றனர். ட்விட்டரில் சிலர் படம் குறித்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.அதில் ஒருவர் படத்தின் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி வேற லெவலில் இருப்பதாகவும், காவல் நிலைய சண்டை காட்சி தாறுமாறாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
naga chaitanya custody review

படம் ஹிட்

நாக சைதன்யா, அரவிந்த் சாமியின் நடிப்பை பாராட்டி சிலர் பதிவிட்டுள்ளனர். சிலர் படம் ஸ்லோவாக தொடங்கி பின்பு விறுவிறுப்பாக செல்வதாக குறிப்பிட்டுள்ளனர். படத்தில் காமெடியும் வொர்க் அவுட்டாகி இருக்கிறதாம்.இந்த படம் நாக சைதன்யா கெரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும் என பதிவிட்டுள்ளனர்.படம் கட்டாயம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என கூறுகின்றனர்.
Image: Twitter
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP