இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் தூக்கம்; நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் சிம்பிள் டிப்ஸ்

இரத்த அழுத்தத்தை குறைப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், உங்கள் தூக்கத்தை மேம்படுத்தக் கூடிய சில எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் விளக்கமாக காணலாம்.
image

இருதய ஆரோக்கியம் என்பது உணவு மற்றும் உடற்பயிற்சியால் மட்டும் சாத்தியமில்லை. சரியான தூக்கமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மிகச் சிறந்த பழக்கமாக தூக்கம் அமைகிறது. இதற்காக அதிக நேரம் தூங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சரியான நேரத்தில் தூங்கினால் போதுமானதாக இருக்கும்.

தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு சென்று, ஒரே நேரத்தில் எழுந்திருப்பது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும், இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த வழக்கமான தூக்க நேரம், தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இது மிகவும் முக்கியமானது ஆகும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சையுடன் இந்த எளிய பழக்கத்தையும் சேர்த்துக் கொள்வது நிரந்தரமான நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

வழக்கமான தூக்கம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த எவ்வாறு உதவுகிறது?

இதயம் உட்பட, உங்கள் உடலின் ஒவ்வொரு பாகமும் சர்க்காடியன் கிளாக் (circadian clock)-ஐ பின்பற்றுகிறது. தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதும், எழுவதும் இதனை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதயத்திற்கு ஏற்படும் அழுத்தம் குறைகிறது. ஒவ்வொரு இரவும் 30 நிமிடங்கள் வித்தியாசம் ஏற்பட்டால் கூட, அது உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

Blood pressure

ஒரு சீரான பழக்கம் எவ்வாறு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது?

உறங்குவதிலும் விழிப்பதிலும் ஒரு சீரான பழக்கத்தை பராமரிப்பது, மன அழுத்த ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இது இதயத்துக்கான புத்துணர்ச்சியை சிறப்பாக அடைய செய்கிறது. இதய ஆரோக்கிய அமைப்புகளின் அறிவியல் வழிகாட்டுதல்கள், தூக்க ஆரோக்கியம், அதன் நேரம் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவை இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளை தடுப்பதில் முக்கியமான காரணிகள் என்பதை வலியுறுத்துகின்றன.

கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துதல்: ஒரு வழக்கமான உறக்கம், தூக்கத்தின் ஆழத்தையும், புத்துணர்ச்சியையும் மேம்படுத்துகிறது. இது இரத்த அழுத்த கட்டுப்பாட்டிற்கு இன்றியமையாதது.

மொத்த உடல் நலத்திற்கு உதவும்: சிறந்த தூக்கம் என்பது மனநிலை, ஆற்றல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளுக்கு உதவுகிறது. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.

மேலும் படிக்க: Home remedy for cracked heels: பாத வெடிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த எளிய வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்களை பின்பற்றுங்கள்

சரியான தூக்கத்தை பெறுவதற்கான வழிமுறைகள்:

நிலையான படுக்கை மற்றும் விழிப்பு நேரத்தை உருவாக்குங்கள்: உங்கள் தினசரி அட்டவணைக்கு ஏற்ற நேரங்களை தேர்ந்தெடுத்து, விடுமுறை நாட்களிலும்கூட அதை பின்பற்றுங்கள். இது உங்கள் உடலுக்கு பயிற்சி அளித்து, புத்துணர்ச்சி அளிக்கும் தூக்கத்தை மேம்படுத்துகிறது.

Sleep importance

அமைதியான சுற்றுச்சூழலை உருவாக்குதல்: படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன், கைபேசி மற்றும் மடிக்கணினி போன்றவற்றை பார்ப்பதை தவிருங்கள். அதற்கு பதிலாக, ஒரு புத்தகம் படிப்பது போன்ற அமைதியான செயல்களில் ஈடுபடுங்கள். இது உங்கள் உடலுக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதற்கான சமிக்ஞையை அளிக்கிறது.

உங்கள் படுக்கையறையை தூக்கத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள்: உங்கள் அறையை குளுமையாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருங்கள். இந்த சுற்றுப்புற காரணிகள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன.

தவிர்க்க வேண்டியவை: மது, காஃபின், அதிகப்படியான உப்பு நிறைந்த இரவு நேர சிற்றுண்டிகளை தவிருங்கள். இது போன்ற பழக்கங்கள் தூக்கம் மற்றும் இதய ஆரோக்கியம் இரண்டையும் பாதிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

இது போன்ற விஷயங்களை தொடர்ச்சியாக பின்பற்றுவதன் மூலம் நன்றாக உறங்கவும் முடியும், இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்க முடியும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP